Thirumeyyam ( Sri Sathyagiri Natha Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 7 |
திருமங்கையாழ்வார் | திருக்குறுந்தாண்டகம் | 1 |
திருமங்கையாழ்வார் | பெரிய திருமடல் | 1 |
Total | 9 |
பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை *
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி *
என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை * கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே
நிலையாளா நின்வணங்க வேண்டாயே யாகிலும் * என்
முலையாள வொருநாளுன் னகலத்தால் ஆளாயே *
சிலையாளா மரமெய்த திறலாளா திருமெய்ய
மலையாளா * நீயாள வளையாள மாட்டோமே
கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி
விட்டானை * மெய்யம் அமர்ந்த பெருமானை *
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே
** அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய்
வெருவினாள் * மெய்யம் வினவி யிருக்கின்றாள் *
பெருகுசீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் * உள்மெலிந் தாள்இது வென்கொலோ
வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையமெல்லாம் *
தாயின நாயக ராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு *
சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்விய வாகி மலர்ந்தசோதி *
ஆயிரம் தோளொ டிலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா
சுடலை யில்சுடு நீறன் அமர்ந்தது * ஓர்
நடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு * என்
உடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண் *
விடலை யைச்சென்று காண்டும்மெய் யத்துளே
மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் *
கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட
மெய்யானை * மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை * கைதொழா கையல்ல கண்டாமே
** பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்
உண்டியான் * சாபம் தீர்த்த ஒருவனூர் * உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று
மண்டினார் * உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே
கோட்டியூர் அன்ன வுருவில் அரியை * திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை