085-Thirukkaatkarai


Thirukkaatkarai ( Sri Kaatkarai Appa Perumal Temple )

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 11

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.1

** உருகுமால்நெஞ்சம் உயிர்ன்பரமன்றி *

பெருகுமால்வேட்கையும் என்செய்கேன்தொண்டனேன் *

தெருவெல்லாங்காலிகழ் திருக்காட்கரை *

மருவியமாயன்றன் மாயம்நினைதொறே


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.2

நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் *

வினைகொள்சீர்பாடிலும் வேமெனதாருயிர் *

கனைகொள்பூஞ்சோலைத் தென்காட்கரையென்னப்பா *

நினைகிலேன் நானுனக்காட்செய்யும்நீர்மையே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.3

நீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து * என்னை

ஈர்மைசெய்து என்னாயிராயென்னுயிருண்டான் *

சீர்மல்குசோலைத் தென்காட்கரையென்னப்பன் *

கார்முகில்வண்ணன்றன் கள்வமறிகிலேன்


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.4

அறிகிலேன்தன்னுள் அனைத்துலகும் நிற்க *

நெறிமையால்தானும் அவற்றுள் நிற்கும்பிரான் *

வெறிகமழ்சோலைத் தென்காட்கரையென்னப்பன் *

சிறியவென்னாயிருண்ட திருவருனே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.5

திருவருள்செய்பவன் போல என்னுள்புகுந்து *

உருவமுமாருயிரும் உடனேயுண்டான் *

திருவளர்சோலைத் தென்காட்கரையென்னப்பன் *

கருவளர்மேனி என்கண்ணன்கள்வங்களே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.6

என்கண்ணன்கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும் *

அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது *

புன்கண்மையெதிப் புலம்பியிராப்பகல் *

என்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.7

காட்கரையேத்தும் அதனுள்கண்ணாவென்னும் *

வேட்கைநோய்கூர நினைந்துகரைந்துகும் *

ஆட்கொள்வானொத்து என்னுயிருண்டமாயனால் *

கோட்குறைபட்டது என்னாருயிர்கோளுண்டே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.8

கோளுண்டானன்றிவந்து என்னுயிர்தானுண்டான் *

நாளுநாள் வந்து என்னை முற்றவுந்தானுண்டான் *

காளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு *

ஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.9

ஆருயிர்பட்டது எனதுயிர்பட்டது *

பேரிதழ்த்தாமரைக்கண் கனிவாயது * ஓர்

காரெழில்மேகத் கேன்காட்கரைகோயில்கொள் *

சீரெழில்நால்தடந்தோள் தெய்வவாரிக்கே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.10

வாரிக் கொண்டு உன்னைவிழுங்குவன் காணிலென்று *

ஆர்வற்றவென்னையொழிய என்னில்முன்னம்

பாரித்து * தானென்னை முற்றப்பருகினான் *

காரொக்கும் காட்கரையப்பன்கடியனே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.6.11

** கடியனாய்க் கஞ்சனைக் சொன்றபிரான்றன்னை *

கொடிமதிள்தென்குருகூர்ச் சடகோபன்சொல் *

வடிவமையாயிரத்து இப்பத்தினால் * சன்மம்

முடிவெய்தி நாசங்கண்டீர்களெங்கானலே