089-ThiruNaavaay


Thiru Naavaay ( Sri Naavaay Mugundha Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 2
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 13

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.3

தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம் *

மூவாமை நல்கி முதலை துணித்தானை *

தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை *

நாவாயு ளானை நறையூரில் கண்டேனே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.9

கம்ப மாகளி றஞ்சிக் கலங்க * ஓர்

கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை *

கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய் *

நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.8.1

** அறுக்கும்வினையாயின ஆகந்தவனை *

நிறுத்தும்மனத் தொன்றிய சிந்தையினார்க்கு *

வெறித்தண்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் *

குறுக்கும்வகையுண்டுகோலோ கொடியேற்கே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.8.2

கொடியேரிடைக் கோகனத்தவள்கேள்வன் *

வடிவேல்தடங்கண் மடப்பின்னைமணாளன் *

நெடியானுறைசோலைகள் சூழ் திருநாவாய் *

அடியேனணுகப்பெறுநாள் எவைகொவோ


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.8.3

எவைகோலணுகப்பெறுநா ளென்றப்போதும் *

கலைபில்மனமின்றிக் கண்ணீர்கள்கலுழ்வன் *

நவையில் திநாரணன்சேர் திருநாவாய் *

அவையுள்புகலாவதோர் நாளறியேனே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.8.4

நாளேலறியேன் எனக்குள்ளன * நானும்

மீளாவடிமைப் பணிசெய்யப்புகுந்தேன் *

நீளார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் *

வாளேய்தடங்கண் மடப்பின்னைமணாளா


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.8.5

மணாளன்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும் *

கண்ணாளனுலகத்துயில் தேவர்கட்கெல்லாம் *

வண்ணாளன்விரும்பிறையும் திருநாவாய் *

கண்ணாரக்களிக்கின்றது இங்கென்றுகொல்கண்டே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.8.6

கண்டேகளிக்கின்றது இங்கென்றுகொல்கண்கள் *

தொண்டேபுனக்காயொழிந்தேன் துரிசின்றி *

வண்டார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் *

கொண்டே யுறைகின்ற எங்கோவலர்கோவே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.8.7

கோவாகிய மாவலியைநிலங்கொண்டாய் *

தேவாசுரம்செற்றவனே திருமாலே *

நாவாயுறைகின்ற என்னாரணநம்பி *

ஆவாலவடியானி னென்றருளாயே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.8.8

அருளாதொழிவாயருள்செய்து * அடியேனைப்

பொருளாக்கி உன்பொன்னடிக்கீழ்புகவைப்பாய் *

மருளேயின்றி உன்னையென்னெஞ்சத்திருத்தும் *

தேருளேதரு தென்திருநாவாயென்தேவே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.8.9

தேவர் முனிவர்க்கென்றும் காண்டற்கரியன் *

மூவர்முதல்வன் ஒருமூவுலகாளி *

தேவன்விரும்பி யுறையும் திருநாவாய் *

யாவரணுகப்பெறுவார் இனியந்தோ


12   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.8.10

அந்தோவணுகப்பெறுநாள் என்றெப்போதும் *

சிந்தைகலங்கித் திருமாவென்றழைப்பன் *

கொந்தார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் *

வந்தேயுறைகின்ற எம்மாமணிவண்ணா


13   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.8.11

** வண்ணம்மணிமாட நன்னாவாயுள்ளானை *

திண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன் *

பண்ணார்தமிழ் ஆயிரத்திப்பத்தும்வல்லார் *

மண்ணாண்டு மணங்கமழ்வர்மல்லிகையே