Thiruvaaran Vilai ( Sri Kuralappa Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
நம்மாழ்வார் | திருவாய்மொழி | 11 |
Total | 11 |
** இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை *
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான் *
அன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை *
அன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ
ஆகுங்கொல் ஐயமொன் றின்றி அகலிடம் முற்றவும் * ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும் *
மாகம் திகழ்கொடி மாடங்கள் நீடும் மதிள்திரு வாறன்விளை *
மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ
கூடுங்கொல் வைகலும் கோவிந்த னைமது சூதனைக் கோளரியை *
ஆடும் பறவை மிசைக்கண்டு கைதொழு தன்றி யவனுறையும் *
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ் *
நீடு பொழில்திரு வாறன் விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற *
வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந் நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை *
வாய்க்கும் பெரும்புகழ் மூவுல கீசன் வடமது ரைப்பிறந்த *
வாய்க்கும் மணிநிறக் கண்ணபி ரான்றன் மலரடிப் போதுகளே
மலரடிப் போதுகள் என்னெஞ்சத் தெப்ப்பொழு துமிருத் திவணங்க *
பலரடி யார்முன் பருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும் *
மலரில் மணிநெடு மாடங்கள் நீடு மதில்திரு வாறன்விளை *
உலகம் மலிபுகழ் பாடநம் மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே
ஒன்றும்நில் லாகெடும் முற்றவும் தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர் *
அன்றங் கமர்வென் றுருப்பி ணிநங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான் *
என்றுமெப் போதுமென் னெஞ்சம் துதிப்ப வுள்ளேயிருக் கின்றபிரான் *
நின்ற அணிதிரு வாறன் விளை யென்னும் நீணக ரமதுவே
நீணக ரமது வேமலர்ச் சோலைகள் சூழ்திரு வாறன்விளை *
நீணக ரத்துறை கின்றபி ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன் *
வாண புரம்புக்கு முக் கட்பி ரானைத் தொலையவெம் போர்கள்செய்து *
வாணனை யாயிரந் தோள்துணித் தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே
அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய் *
நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் *
சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை *
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினையுள்ளத்தின் சார்வல்லவே
தீவினை யுள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளிவிசும் பேறலுற்றால் *
நாவினுள் ளுமுள்ளத் துள்ளும் அமைந்த தொழிலினுள் ளும்நவின்று *
யாவரும் வந்து வணங்கும் பொழில்திரு வாறன் விளையதனை *
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே
சிந்தைமற் றொன்றின் திறத்ததல் லாத்தன்மை தேவபி ரானறியும் *
சிந்தையி னால்செய்வ தானறி யாதன மாயங்கள் ஒன்றுமில்லை *
சிந்தையி னால்சொல்லி னால்செய்கை யால்நிலத் தேவர் குழுவணங்கும் *
சிந்தை மகிழ்திரு வாறன் விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே
** தீர்த்தனுக் கற்றபின் மற்றோர் சரணில்லை யென்றெண்ணி *
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன *
தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை பத்தும்வல் லார்களை * தேவர்வைகல்
தீர்த்தங்க ளேயென்று பூசித்து நல்கி யுரைப்பார்தம் தேவியர்க்கே