Thiruvengadam ( Thirumalai Thirupathi Venkateswara Perumal Temple )
Azhwar | Paasuram | Count | Video | Audio |
---|---|---|---|---|
பெரியாழ்வார் | பெரியாழ்வார் திருமொழி | |||
ஆண்டாள் | நாச்சியார் திருமொழி | |||
குலசேகராழ்வார் | பெருமாள் திருமொழி | |||
திருமழிசை ஆழ்வார் | திருச்சந்த விருத்தம் | |||
திருமழிசை ஆழ்வார் | நான்முகன் திருவந்தாதி | |||
திருப்பாணாழ்வார் | அமலனாதிபிரான் | |||
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | |||
திருமங்கையாழ்வார் | திருக்குறுந்தாண்டகம் | |||
திருமங்கையாழ்வார் | திருநெடுந்தாண்டகம் | |||
திருமங்கையாழ்வார் | சிறிய திருமடல் | |||
திருமங்கையாழ்வார் | பெரிய திருமடல் | |||
பொய்கையாழ்வார் | முதல் திருவந்தாதி | |||
பூதத்தாழ்வார் | இரண்டாம் திருவந்தாதி | |||
பேயாழ்வார் | மூன்றாந் திருவந்தாதி | |||
நம்மாழ்வார் | திருவிருத்தம் | |||
நம்மாழ்வார் | திருவாய்மொழி | |||
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும் *
எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய் *
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற *
கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா
|
|
|
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் *
முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன *
மன்னு நமுசியை வானில் சுழற்றிய *
மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ
|
|
|
தென்னிலங்கை மன்னன்சிரம்தோள் துணி செய்து *
மின்னிலங் குபூண் விபீடண நம்பிக்கு *
என்னிலங்கு நாமத்த ளவும் அரசென்ற *
மின்னிலங் காரற்குஓர் கோல்கொண்டுவா வேங்கட வாணர்க்குஓர் கோல்கொண்டுவா
|
|
|
மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்கு *
கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி *
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள்திரு வேங்கடத்து எந்தாய் *
பச்சைத் தமனகத் தோடு பாதிரிப் பூச்சூட்ட வாராய்
|
|
|
போதர்கண் டாய்இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய் *
ஏதேனும் சொல்லி அசல கத்தார்ஏதேனும் பேசநான் கேட்க மாட்டேன் *
கோது கலமுடைக் குட்ட னேயா குன்றெடுத் தாய்குட மாடுகூத்தா *
வேதப் பொருளே என்வேங்கடவா வித்தக னேஇங்கே போத ராயே
|
|
|
கடியார் பொழிலணி வேங்கட வாகரும் போரே றே * நீ யுகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே *
கடியவெங் கானிடைக் கன்றின்பின் போன சிறுக்குட் டச்செங் கமல
அடியும் வெதும்பி * உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட் டாய்நீ எம்பிரான்
|
|
|
சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் * உலகு
தன்னைவாழ நின்றநம்பீ தாமோதரா சதிரா * என்னையும்
என்னுடைமையையும்உஞ் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு *
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே
|
|
|
தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள் *
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித் தனங்கதேவா *
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி உன்னையு மும்பியையும் தொழுதேன் *
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே
|
|
|
மத்தநன் னறுமலர் முருக்கமலர் கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி *
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து வாசகத் தழித்துன்னை வைதிடாமே *
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு கோவிந்த னென்பதோர் பேரேழுதி *
வித்தகன் வேங்கட வாணனென்னும் விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே
|
|
|
காட்டில் வேங்கடம் கண்ண புரநகர் *
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன் *
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி * தன்னொடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே
|
|
|
வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட விமல னெனக்குருக் காட்டான் *
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும் *
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடுங் குயிலே *
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய்
|
|
|
** விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் *
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே *
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை *
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?
|
|
|
மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் * வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே *
காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல் *
ஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய்நா னிருப்பேனே
|
|
|
ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம் *
எளிமையா லிட்டென்னை ஈடழியப் போயினவால் *
குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி *
அளியத்த மேகங்காள் ஆவிகாத் திருப்பேனே
|
|
|
மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் * வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு *
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும் *
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே
|
|
|
வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் * வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள் *
ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான் *
தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே
|
|
|
சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் * மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள் *
உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்து * என்னை
நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே
|
|
|
** சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் * வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம் *
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து * ஒருநாள்
தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே
|
|
|
கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் * வேங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி *
நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை *
வார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே!
|
|
|
** மதயானை போலெழுந்த மாமுகில்காள் * வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தையென்னே *
கதியென்றும் தானாவான் கருதாது * ஓர் பெண்கொடியை
வதைசெய்தான் என்னும்சொல் வையகத்தார் மதியாரே
|
|
|
** நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய் *
மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம் *
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ் *
ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே
|
|
|
பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் * நல் வேங்கட
நாடர் நமக்கொரு வாழ்வுதந் தால்வந்து பாடுமின் *
ஆடும் கருளக் கொடியுடை யார்வந் தருள்செய்து *
கூடுவ ராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே
|
|
|
மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்று *
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற *
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்
தழுவநின்று * என்னைத் ததைத்துக்கொண் டூற்றவும் வல்லையே
|
|
|
** ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன் *
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால் *
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து *
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே
|
|
|
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ *
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் *
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில் *
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே
|
|
|
பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும் *
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல் *
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும் *
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே
|
|
|
ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள் *
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு *
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து *
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே
|
|
|
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து *
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன் *
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல் *
தம்பமாய் நிற்கும் தவமுடையே னாவேனே
|
|
|
மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும் *
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன் *
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள் *
அன்னனைய பொற்குவடா மருந்தவத்த னாவேனே
|
|
|
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் * மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன் *
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல் *
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே
|
|
|
பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும் *
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான் *
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல் *
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே
|
|
|
** செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே *
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல் *
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும் *
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
|
|
|
உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் * உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன் *
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும் *
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே
|
|
|
** மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன் *
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி *
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன *
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே
|
|
|
குன்றில்நின்று வானிருந்து நீள்கடல்கி டந்து * மண்
ஒன்றுசென்ற தொன்றையுண்ட தொன்றிடந்து
பன்றியாய் * நன்றுசென்ற நாளவற்றுள் நல்லுயிர்ப டைத்தவர்க்கு *
அன்றுதேவ மைத்தளித்த ஆதிதேவ னல்லயே
|
|
|
செழுங்கொழும்பெ ரும்பனிபொ ழிந்திடஉ யர்ந்தவேய் *
விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு டைக்கும்வேங்க டத்துள்நின்று *
எழுந்திருந்து தேன்பொருந்து பூம்பொழில்த ழைக்கொழுஞ் *
செழுந்தடங்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே
|
|
|
கடைந்தபாற்க டல்கிடந்து காலநேமி யைக்கடிந்து *
உடைந்தவாலி தந்தனுக்கு உதவவந்தி ராமனாய் *
மிடைந்தவேழ்ம ரங்களும டங்கவெய்து வேங்கடம் *
அடைந்தமால பாதமே யடைந்துநாளு முய்ம்மினோ
|
|
|
குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த *
குறிப்பெனக்கு நன்மை பயக்க * வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல் *
தான்கடத்தும் தன்மையான் தாள்
|
|
|
அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண *
இழைப்பன் திருக்கூடல் கூட * மழைப்பே
ரருவி மணிவரன்றி வந்திழிய * யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு
|
|
|
வெற்பென்று வேங்கடம் பாடினேன் * வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் * கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் *
கால்வலையில் பட்டிருந்தேன் காண்
|
|
|
காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர *
ஓண விழவில் ஒலியதிர * பேணி
வருவேங் கடவா என் னுள்ளம் புகுந்தாய் *
திருவேங் கடமதனைச் சென்று
|
|
|
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை *
நின்று வினைகெடுக்கும் நீர்மையால் * என்றும்
கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும் *
அடிக்கமலம் இட்டேத்து மங்கு
|
|
|
மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை *
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் * திங்கள்
சடையேற வைத்தானும் தாமரைமே லானும் *
குடையேறத் தாம்குவித்துக் கொண்டு
|
|
|
கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய் *
தண்ட அரக்கன் தலைதளால் * பண்டெண்ணி
போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே *
போம்குமர ருள்ளீர் புரிந்து
|
|
|
புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம் *
பரிந்து படுகாடு நிற்ப * தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே *
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு
|
|
|
வைப்பன் மணிவிளக்கா மாமதியை * மாலுக்கென்
றெப்பொழுதும் கைநீட்டும் யானையை * எப்பாடும்
வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே *
நாடுவளைத் தாடுமேல் நன்று
|
|
|
நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் *
பொன்மணியும் முத்தமும் பூமரமும் * பன்மணிநீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும் *
வேடு முடைவேங் கடம்
|
|
|
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் * மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும் * வேங்கடமே
தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு *
வானவரைக் காப்பான் மலை
|
|
|
வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார் * வேங்கடத்தான்
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள் * மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய் * மற்றவர்க்கே
தாழா யிருப்பார் தமர்
|
|
|
அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன் * விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன் *
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான் * திருக்
கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே
|
|
|
** மந்தி பாய்வட வேங்கட மாமலை * வானவர்கள்
சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான் *
அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில் *
உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே
|
|
|
** கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான் *
சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன் *
பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம் * பொங்குநீர்ச்
செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடமடை நெஞ்சமே
|
|
|
** பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை *
பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம் *
வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி * நாடொறும்
தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே
|
|
|
நின்றமா மருதிற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான் *
என்றும்வானவர்க்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான் *
கன்றிமாரிபொழிந்திடக் கடிதானிரைக்கிடர் நீக்குவான் *
சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே
|
|
|
** பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர் *
கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன் *
ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான் *
தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே
|
|
|
வண்கையானவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய் *
மண்கையாலிரந்தான் மராமரமேழுமெய்தவலத்தினான் *
எண்கையானிமயத்துள்ளான் இருஞ்சோலைமேவியவெம்பிரான் *
திண்கைம்மாதுயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே
|
|
|
எண்டிசைகளுமேழுலகமும்வாங்கிப் பொன்வயிற்றில்பெய்து *
பண்டோராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்கிடர்த்தீர்த்தவன் *
ஒண்டிறலவுணனுரத்துகிர்வைத்தவன்ஒள்ளெயிற்றொடு *
திண்டிறலரியாயவன் திருவேங்கடமடைநெஞ்சமே
|
|
|
பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமுமிவையாயினான் *
பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம் *
காரும்வார்ப்பனிநீள்விசும்பிடைச் சோருமாமுகில்தோய்தர *
சேரும்வார்ப்பொழில்சூழ் எழில்திருவேங்கடமடைநெஞ்சமே
|
|
|
அம்பரமனல்கால்நிலம் சலமாகிநின்றவமரர்க்கோன் *
வம்புலாமலர்மேல் மலிமட மங்கை தன்கொழுநனவன் *
கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும் *
செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே
|
|
|
பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று பின்னரும் *
பேசுவார்த்தம்மையுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம் *
வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம் *
தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே
|
|
|
** செங்கயல்திளைக்கும் சுனைத் திருவேங்கடத்துறைசெல்வனை *
மங்கையர்த்தலைவங்கலிகன்றி வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள் *
சங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே *
வங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே
|
|
|
** தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும் *
நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால் *
வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா *
நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே
|
|
|
மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து *
நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன் *
தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை * என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே
|
|
|
கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால் *
என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன் *
குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா *
அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே
|
|
|
குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன் *
நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன் *
நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்த்திருவேங்கடவா *
அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே
|
|
|
எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன் *
துப்பா! நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன் *
செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை * என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே
|
|
|
மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம் *
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன் *
விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா *
அண்ணா வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே
|
|
|
தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன் *
பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன் *
கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா *
அரியே வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே
|
|
|
நோற்றேன்பல்பிறவி உன்னைக்காண்பதோராசையினால் *
ஏற்றேனிப்பிறப்பே யிடருற்றனனெம்பெருமான் *
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ்வேங்கடவா *
ஆற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே
|
|
|
பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன் *
மற்றேலொன்றறியேன் மாயனே எங்கள்மாதவனே *
கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா *
அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே
|
|
|
** கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை *
விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை *
திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன் *
பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே
|
|
|
** கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன் *
திண்ணாகம்பிளக்கச் சரம்செலவுய்த்தாய் *
விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய *
அண்ணா அடியேன் இடரைக்களையாயே
|
|
|
இலங்கைப்பதிக்கு அன்றீறையாய * அரக்கர்
குலம்கெட்டவர்மாளக் கொடிப்புள்திரித்தாய் *
விலங்கல்குடுமித் திருவேங்கடம்மேய *
அலங்கல்துளபமுடியாய் அருளாயே
|
|
|
நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு *
ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய் *
சீரார் திருவேங்கடமாமலைமேய *
ஆராவமுதே அடியேற்கருளாயே
|
|
|
உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக *
கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே *
விண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய *
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே
|
|
|
தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி *
பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய் *
சேணார் திருவேங்கடமாமலைமேய *
கோணாகணையாய குறிக்கொள்ளெனைநீயே
|
|
|
மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி *
தன்னாகித் தன்னினருள்செய்யும்தலைவன் *
மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய *
என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே
|
|
|
மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த *
ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா *
தேனே திருவேங்கடமாமலைமேய *
கோனே என்மனம் குடிகொண்டிருந்தாயே
|
|
|
சேயனணியன் எனசிந்தையுள்நின்ற மாயன் *
மணிவாளொளி வெண்டரளங்கள் *
வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய *
ஆயனடியல்லது மற்றறையேனே
|
|
|
வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய் *
நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ *
சிந்தாமணியே திருவேங்கடம்மேய
எந்தாய் * இனியானுன்னை யென்றும் விடேனே
|
|
|
** வில்லார்மலி வேங்கடமாமலைமேய *
மல்லார்த்திரடோள் மணிவண்ணனம்மானை *
கல்லார்த்திரடோள் கலியன்சொன்னமாலை *
வல்லாரவர் வானவராகுவர்த்தாமே
|
|
|
** வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே இனிவந்து * மாதவ
மானவர் தங்கள் சிந்தையமர்ந்துறை கின்றவெந்தை *
கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி * மாண்குறள்
ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே
|
|
|
உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன் உகந்தவர் தம்மை * மண்மிசைப்
பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய் *
குறவர் மாதர்க ளோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து *
அறவ நாயகற் கின்று அடிமைத் தொழில் பூண்டாயே
|
|
|
இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்து வாருற வோடும் * வானிடைக்
கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய் *
வண்டு வாழ்வட வேங்கடமலை கோயில் கொண்டத னோடும் * மீமிசை
அண்ட மாண்டிருப் பாற்கு அடிமைத்தொழில் பூண்டாயே
|
|
|
பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே பண்டு தொண்டுசெய் தாரை * மண்மிசை
மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை *
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்க டமலை யாண்டு * வானவர்
ஆவி யாயிருப் பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
|
|
|
பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை *
தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய் *
எங்கும் வானவர் தான வர்நிறைந் தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள் *
அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே
|
|
|
துவரி யாடையர் மட்டை யர்சமண் தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும் *
தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய் *
கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை *
அமர நாயகறகு இன்றடிமைத் தொழில் பூண்டாயே
|
|
|
தருக்கி னால்சமண் செய்து சோறுதண் தயிரினால்திரளை * மிடற்றிடை
நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய் *
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டத னோடும் * வானிடை
அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே
|
|
|
சேயனணியன் சிறியன் பெரிய னென்பது சிலர்ப்பேசக் கேட்டிருந்தே *
என் னெஞ்சமென் பாய் எனக் கொன்று சொல்லாதே *
வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி வேங்க டமலை கோயில் மேவிய *
ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே
|
|
|
கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்நெஞ்சமென் பாய் துணிந்துகேள் *
பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா *
ஆடு தாமரை யோனு மீசனும் அமர் கோனும்நின் றேத்தும் * வேங்கடத்து
ஆடு கூத்தனுக் கின்று அடிமைத்தொழில் பூண்டாயே
|
|
|
** மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க டமலை கோயில்மேவிய *
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை *
கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி கன்றி யிந்தமி ழாலு ரைத்த * இம்
மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே
|
|
|
அன்றிய வாண னாயிரம் தோளும் துணியவன் றாழிதொட் டானை *
மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேதநல் விளக்கை *
தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய் கோயிலி னுள்ளே *
மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந்தேனே
|
|
|
** வேடார் திருவேங் கடம்மேய விளக்கே *
நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர் *
சேடார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்தாய் *
பாடா வருவேன் விணையா யினபாற்றே
|
|
|
வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக ஐவர்க்கட் கரசளித்த *
காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருளெனக்கு *
மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பெய்த *
தீம்ப லங்கனித் தேனது நுகர்திரு வெள்ளறை நின்றானே
|
|
|
** வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே எங்கின் றாளால் *
மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண் துயில்மறந்தாள் * வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர்த முயிராளன் ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட
திருவாளன் * என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே
|
|
|
சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை * பிரியாது
வந்தெனது மனத்திருந்த வடமலையை * வரிவண்டார்
கொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த
அந்தணனை * யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே,
|
|
|
** மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய் * மாவலிமண்
தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை *
தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை *
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே
|
|
|
ஆங்கு வெந்நர கத்தழுந் தும்போ தஞ்சே லென்றடி யேனையங் கேவந்து
தாங்கு * தாமரை யன்னபொன் னாரடி எம்பி ரானை உம் பர்க்கணி யாய்நின்ற *
வேங்கடத்தரி யைப்பரி கீறியை வெண்ணெ யுண்டுர லினிடை யாப்புண்ட
தீங்க ரும்பினை * தேனைநன் பாலினை அன்றி யென்மனம் சிந்தைசெய் யாதே
|
|
|
எங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனை வாச வார்குழ லாள்மலை மங்கைதன்
பங்க னை * பங்கில் வைத்துகந் தான்றன்னைப் பான்மை யைப்பனி மாமதி யம்தவழ் *
மங்கு லைச் சுட ரைவட மாமலை உச்சியை நச்சி நாம்வணங் கப்படும்
கங்குலை * பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே
|
|
|
** அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய்
வெருவினாள் * மெய்யம் வினவி யிருக்கின்றாள் *
பெருகுசீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் * உள்மெலிந் தாள்இது வென்கொலோ
|
|
|
பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார் பணைமுலை அணைதும் நாம் என்று *
எண்ணுவார் எண்ணம தொழித்துநீ பிழைத்துய்யக் கருதி னாயேல் *
விண்ணுளார் விண்ணின்மீ தியன்ற வேங்கடத்துளார் * வளங்கொள்
முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே
|
|
|
** வலம்புரி யாழி யனைவரை யார்திரள் தோளன்றன்னை *
புலம்புரி நூலவ னைப்பொழில் வேங்கட வேதியனை *
சிலம்பிய லாறுடை யதிரு மாலிருஞ் சோலைநின்ற *
நலந்திகழ் நாரண னைநணு குங்கொலென் நன்னுதலே
|
|
|
** பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர்
மின்னை * வேங்கடத் துச்சியிற் கண்டுபோய் *
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
றன்னை * யாம்சென்று காண்டும்தண் காவிலே
|
|
|
** சொல்லாய் பைங்கிளியே *
சுடராழி வலனுயர்த்த *
மல்லார் தோள்வட வேங்கட வன்வர *
சொல்லாய் பைங்கிளியே
|
|
|
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் * கைவளைகள்
என்னோ கழன்ற இவையென்ன மாயங்கள் *
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க * அவன்மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே
|
|
|
** கள்ளத்தால் மாவலியை மூவடிமண் கொண்டளந்தான் *
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ *
வெள்ளத்தான் வேங்கடத்தா னேலும் * கலிகன்றி
உள்ளத்தி னுள்ளே உலன்கண்டாய் சாழலே
|
|
|
இம்மையை மறுமை தன்னை எமக்குவீ டாகி நின்ற *
மெய்ம்மையை விரிந்த சோலை வியந்திரு வரங்கம் மேய *
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமை யானை *
தன்மையை நினைவா ரென்றன் தலைமிசை மன்னு வாரே
|
|
|
** நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் * ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய் * உலக மேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் * பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான்உன் திருவடியே பேணி னேனே
|
|
|
வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய்மதிள்கச்சி யூராய் பேராய் *
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்
பங்கத்தாய் * பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா *
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே
|
|
|
கன்றுமேய்த் தினிதுகந்த காளாய் என்றும் கடிபொழில்சூழ் கணபுரத்தென் கனியே என்றும் *
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும் *
வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும் விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய்என்றும் *
துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே
|
|
|
நானவனை காரார் திருமேனி காணுமளவும்போய் *
** சீரார் திருவேங் கடமே திருக்கொவல் ஊரே
|
|
|
என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த * மழைக்கூந்தல்
தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்
———————–
** தெந்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை *
மின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை
|
|
|
எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை *
வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவார் *
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே * வானோர்
மனச்சுடரைத் தூண்டும் மலை
|
|
|
வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் * நாளும்
புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி * திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே * வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்த வூர்
|
|
|
ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை *
பேர எறிந்த பெருமணியை * காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே * மேலசுரர்
என்னென்ற மால திடம்
|
|
|
இடந்தது பூமி எடுத்தது குன்றம் *
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச * கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே *
பேரோத வண்ணர் பெரிது
|
|
|
பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ *
வெருவிப் புனம்துறந்த வேழம் * இருவிசும்பில்
மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே * மேலசுரர்
கோன்வீழ கண்டுகந்தான் குன்று
|
|
|
உணர்வாரா ருன்பெருமை யூழிதோ றூழி *
உணர்வாரா ருன்னுருவந் தன்னை * உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் * நால்வேதப்
பண்ணகத்தாய் நீகிடந்த பால்
|
|
|
வழிநின்று நின்னைத் தொழுவார் * வழுவா
மொழிநின்ற மூர்த்தியரே யாவர் * பழுதொன்றும்
வாராத வண்ணமே விண்கொடுக்கும் * மண்ணளந்த
சீரான் திருவேங் கடம்
|
|
|
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் * அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் * நான்கிடத்தும்
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே *
என்றால் கெடுமாம் இடர்
|
|
|
படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள் * பைம்பூந்
தொடையலோ டேந்திய தூபம், * இடையிடையின்
மீன்மாய மாசூணும் வேங்கடமே * மேலொருநாள்
மான்மாய எய்தான் வரை
|
|
|
உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன்கண்டாய் * உள்ளூவா ருள்ளத் – துளன்கண்டாய் *
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும் *
உள்ளத்தி னுள்ளனென் றோர்
|
|
|
சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால் *
கொன்ற திராவணனைக் கூறுங்கால் * நின்றதுவும்
வேயோங்கு தண்சாரல் வேங்கடமே * விண்ணவர்தம்
வாயோங்கு தொல்புகழான் வந்து
|
|
|
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் * எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான் * முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன்
|
|
|
துணிந்தது சிந்தை துழாயலங்கல் * அங்கம்
அணிந்தவன்பே ருள்ளத்துப் பல் கால் * பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே *
வாய்திறங்கள் சொல்லும் வகை
|
|
|
உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று *
தளர்தல் அதனருகும் சாரார் * அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும் *
பாதத்தான் பாதம் பயின்று
|
|
|
பயின்ற தரங்கம் திருக்கோட்டி * பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே *
மணிதிகழும் வண்தடக்கை மால்
|
|
|
நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து *
அறியா திளங்கிரியென் றெண்ணி * பிறியாது
பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும் *
வேங்கடமே யாம்விரும்பும் வெற்பு
|
|
|
வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும் *
நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல் * நிற்பென்
றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன் * வெள்ளத்
திளங்கோயில் கைவிடேல் என்று
|
|
|
போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு * ஆங்கலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் * போது உள்ளம் போது
மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல *
அணிவேங் கடவன்பே ராய்ந்து
|
|
|
பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று *
இருக ணிளமூங்கில் வாங்கி * அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர் *
வான்கலந்த வண்ணன் வரை
|
|
|
மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு *
நூற்பால் மனம்வைக்க நொய்விதாம் * நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும் *
பாதத்தான் பாதம் பணிந்து
|
|
|
சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும் *
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் * உறைந்ததுவும்,
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே *
தாம்கடவார் தண்டுழா யார்
|
|
|
சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம் *
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு * வாய்ந்த
மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி *
இறைபாடி யாய இவை
|
|
|
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும் *
நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல் * பாற்பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான் *
குருந்தொசித்த கோபா லகன்
|
|
|
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய் *
மறையாய் மறைப்பொருளாய் வானாய் * பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான் *
உள்ளத்தி னுள்ளே உளன்
|
|
|
உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தம னென்றும்
உளன்கண்டாய் * உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய் *
விண்ணெடுங்கக் கோடுயரும் வீங் கருவி வேங்கடத்தான் *
மண்ணெடுங்கத் தானளந்த மன்
|
|
|
புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித் *
திரிந்து சினத்தால் பொருது * விரிந்தசீர் வெண்கோட்டு
முத்துதிர்க்கும் வேங்கடமே * மேலொருநாள்
மண்கோட்டுக் கொண்டான் மலை
|
|
|
தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி *
அளிந்த கடுவனையே நோக்கி * விளங்கிய
வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே * மேலொருநாள்
மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு
|
|
|
** பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் *
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் * வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை *
இளங்குமரன் றன்விண் ணகர்
|
|
|
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம் *
மண்ணகரம் மாமாட வேளுக்கை * மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி *
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு
|
|
|
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் *
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் * சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு *
இரண்டுருவு மொன்றாய் இசைந்து
|
|
|
பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு * பேர்த்தோர்
கடுவனெனப் பேர்ந்து * கார்த்த
களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே * மேனாள்
விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு
|
|
|
வெற்பென்று வேங்கடம் பாடும் * வியன்துழாய்க்
கற்பென்று சூடும் கருங்குழல் மேல் * மற்பொன்ற
நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான் *
பூண்டநா ளெல்லாம் புகும்
|
|
|
புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து * அருவி
உகுமதத்தால் கால்கழுவிக் கையால் * மிகுமதத்தேன்
விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே *
கண்டு வணங்கும் களிறு
|
|
|
களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி *
ஒளிறு மருப்பொசிகை யாளி பிளிறி
விழ * கொன்று நின்றதிரும் வேங்கடமே * மேல்நாள்
குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று
|
|
|
குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வ ளைக்கை *
சென்று விளையாடும் தீங்கழைபோய் * வென்று
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே *
மேலை இளங்குமரர் கோமான் இடம்
|
|
|
இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி *
வடமுக வேங்கடத்து மன்னும் * குடம்நயந்த
கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே*
நாத்தன்னா லுள்ள நலம்
|
|
|
சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய் *
ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை * சேர்ந்து
சினவேங்கை பார்க்கும் திருமலையே * ஆயன்
புனவேங்கை நாறும் பொருப்பு
|
|
|
முடிந்த பொழுதில் குறவாணர் * ஏனம்
படிந்துழுசால் பைந்தினைகள் வித்த * தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே * மேலொருநாள்
தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு
|
|
|
காண்கின் றனகளும் கேட்கின் றனகளும் காணில் * இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்றன * இதெல்லா மறிந்தோம்
மாண்குன்ற மேந்திதண் மாமலை வேங்கடத் தும்பர்நம்பும்
சேண்குன்றம் சென்று * பொருள்படைப் பான்கற்ற திண்ணனவே
|
|
|
மாயோன் வடதிருவேங் கடநாட * வல் லிக்கொடிகாள்
நோயோ வுரைக்கிலும் கேட்கின்றி லீருரையீர் * நுமது
வாயோ அதுவன்றி வல்வினை யேனும் கிளியுமெள்கும்
ஆயோ அடும்தொண்டை யோ * அறை யோவி தறிவரிதே
|
|
|
கயலோ நுமகண்கள் என்று களிறுவினவி நிற்றீர் *
அயலோர் அறியிலு மீதென்ன வார்த்தை * கடல்கவர்ந்த
புயலோ டுலாம்கொண்டல் வண்ணன் புனவேங் கடத்தெம்மொடும்
பயலோ விலீர் * கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே
|
|
|
இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம் * என்தலைமேல்
அசைமின்க ளென்றா லசையிங்கொ லாம் * அம்பொன் மாமணிகள்
திசைமின் மிளிரும் திருவேங் கட்த்துவன் தாள்சிமயம்
மிசைமின் மிளிரிய போவான் * வழிக் கொண்ட மேகங்களே
|
|
|
ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை * விரைந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடாகின்று * தேன்நவின்ற
வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று * அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே
|
|
|
** முலையோ முழுமுற்றும் போந்தில * மொய்பூங் குழல்குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் * கடல்மண்ணெல்லாம்
விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பரமே பெருமான்
மலையோ * திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே
|
|
|
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று *
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு * அசுரர்செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன் னாள் * கண்க ளாய துணைமலரே
|
|
|
உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பில ராய் * இவளைப்
பெருகின்ற தாயர்மெய்ந் நொந்து பெறார்கொல் * துழாய்குழல்வாய்த்
துறுகின் றிலர்தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்ற தாலிவ ளாகம் * மெல் லாவி எரிகொள்ளவே
|
|
|
கண்ணா வானென்றும் * மண்ணோர்விண்ணோர்க்கு *
தண்ணார் வேங்கட * விண்ணோர் வெற்பனே
|
|
|
எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கைசெற்றாய் * மராமரம்
பைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா *
கொந்தார்தண்ணந்துழாயினாயமுதே உன்னையென்னுள்ளே குழைத்தவெம்
மைந்தா * வானேறே, இனியெங்குப்போகின்றதே?
|
|
|
போகின்றகாலங்கள்போயகாலங் கள்போகுகாலங்கள் * தாய்தந்தையுயி
ராகின்றாய் உன்னைநானடைந்தேன்விடுவேனோ *
பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே பரமா * தண்வேங்கட
மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே
|
|
|
பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன் *
எற்பரனென்னையாக்கிக் கொண்டெனக்கேதன்னைத்தந்த
கற்பகம் * என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்
வெற்பன் * விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே
|
|
|
** ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி *
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம் *
தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து *
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே
|
|
|
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை * வானவர் வானவர் கோனொடும் *
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து *
அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே
|
|
|
அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் * செங்கனி வாய்க்கரு மாணிக்கம் *
தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து *
எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே
|
|
|
ஈசன் வானவர்க் கென்பனென் றால் * அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு *
நீச னென் நிறை வொன்றுமி லேன் * என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே
|
|
|
சோதி யாகியெல் லாவுல கும்தொழும் *
ஆதி மூர்த்தியென் றாலள வகுமோ *
வேதி யர்முழு வேதத் தமுதத்தை *
தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே
|
|
|
வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும் *
தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார் *
வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன
லாங்க டமை * அதுசுமந் தார்க்கட்கே
|
|
|
சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு *
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் *
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு *
சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே
|
|
|
** குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் *
அன்று ஞாலம் அளந்த பிரான் * பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை *
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே
|
|
|
ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி *
வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்
தாயன் * நாண்மல ராமடித் தாமரை *
வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே
|
|
|
வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று *
எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ *
பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம் *
மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே
|
|
|
** தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை *
நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல் *
கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர் *
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே
|
|
|
வார்ப்புனல் அந்தண் ணருவி வடதிரு வேங்கடத் தெந்தை *
பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப் பித்தரென் றேபிறர் கூற *
ஊர்ப்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்கநின் றாடி *
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படு வாரே
|
|
|
** சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ *
என்னாவில் இன்கவி யானொருவ ர்க்கும் கொடுக்கிலேன் *
தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து *
என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே
|
|
|
** மாரி மாறாத தண்ணம்மலை வேங்கடத் தண்ணலை *
வாரி வாறாத பைம்பூம் பொழில்சூழ் குருகூர்நகர் *
காரி மாறன் சடகோபன் சொல்லாயிரத் திப்பத்தால் *
வேரி மாறாத பூமே லிருப்பாள் வினைதீர்க்குமே
|
|
|
** மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு *
நீலக் கருநிற மேக நியாயற்கு *
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு * என் கொங்கலர்
ஏலக் குழலி யிழந்தது சங்கே
|
|
|
சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு *
செங்கனி வாய்ச்செய்ய தாமரை கண்ணற்கு *
கொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்கு * என்
மங்கை யிழந்தது மாமை நிறமே
|
|
|
நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட *
திறம்கிளர் வாய்ச்சிறு கள்ள னவற்கு *
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு * என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே
|
|
|
பீடுடை நான்முக னைப்படைத்தானுக்கு *
மாடுடை வையம் அளந்த மணாளற்கு *
நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு * என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே
|
|
|
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு *
மண்புரை வையம் இடந்த வராகற்கு *
தெண்புனல் பள்ளியெந் தேவப் பிரானுக்கு * என்
கண்புனை கோதை இழந்தது கற்பே
|
|
|
கற்பகக் காவன நற்பல தோளற்கு *
பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு *
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு * என்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே
|
|
|
மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு *
பையர வினணைப் பள்ளியி னானுக்கு *
கையொடு கால்செய்ய கண்ண பிரானுக்கு * என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே
|
|
|
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு *
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு *
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்கு * என்
வாசக் குழலி இழந்தது மாண்பே
|
|
|
மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு *
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு *
காண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்கு * என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே
|
|
|
பொற்பமை நீண்முடிப் பூந்தண் டுழாயற்கு *
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு *
நிற்பன பல்லுரு வாய்நிற்கு மாயற்கு * என்
கற்புடை யாட்டி யிழந்தது கட்டே
|
|
|
** கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை *
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல் *
கட்டெழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர் *
கட்டெழில் வானவர் போகமுண் பாரே
|
|
|
** உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே *
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி நெடியாய் அடியே னாருயிரே *
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே *
குலதொல் லடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே
|
|
|
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் லசுரர் குலமெல்லாம் *
சீறா எறியும் திருநேமி வலவா தெய்வக் கோமானே *
சேறார் சுனைத்தா மரைசெந்தீ மலரும் திருவேங் கடத்தானே *
ஆறா அன்பில் அடி யேனுன் அடிசேர் வண்ணம் அருளாயே
|
|
|
வண்ண மருள்கொள் அணிமேக வண்ணா மாய அம்மானே *
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே *
தெண்ணல் அருவி மணிபொன்முத் தலைக்கும் திருவேங் கடத்தானே *
அண்ண லே!உன் அடிசேர அடியேற் காவா வென்னாயே
|
|
|
ஆவா வென்னா துலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல் *
தீவாய் வாளி மழைபொழிந்த சிலையா திருமா மகள்கேள்வா *
தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே *
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்து மாறு புணராயே
|
|
|
புணரா நின்ற மரமேழன் றெய்த வொருவில் வலவாவோ *
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ *
திணரார் மேகம் எனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே *
திணரார் சார்ங்கத் துன்பாதம் சேர்வ தடியே னெந்நாளே
|
|
|
எந்நா ளேநாம் மண்ணளந்த இணைத்தா மரைகள் காண்பதற்கெ ன்று *
எந்நா ளும்நின் றிமையோர்கள் ஏத்தி யிறைஞ்சி யினமினமாய் *
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே *
மெய்ந்நா னெய்தி யெந்நாளுன் அடிக்கண் அடியேன் மேவுவதே
|
|
|
அடியேன் மேவி யம ர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே *
கொடியா அடுபுள் ளுடையானே கோலக் கனிவாய்ப் பெருமானே *
செடியார் வினைகள் தீர்மருந்தே திருவேங் கடத்தெம் பெருமானே *
நொடியார் பொழுதும் உன்பாதம் காண நோலா தாற்றேனே
|
|
|
நோலா தாற்றேன் நுன்பாதம் காண வென்று நுண்ணுணர்வில் *
நீலார் கண்டத் தம்மானும் நிறைநான் முகனு மிந்திரனும் *
சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திருவேங் கடத்தானே *
மாலாய் மயக்கி யடியேன்பால் வந்தாய் போல வாராயே
|
|
|
வந்தாய் போலே வாராதாய் வாரா தாய்போல் வருவானே *
செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே எனதுயிரே *
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே *
அந்தோ அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே
|
|
|
** அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங் கை யுறைமார்பா *
நிகரில் புகழாய் உலகமூன் றுடையாய் என்னை ஆள்வானே *
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே *
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே
|
|
|
** அடிக்கீ ழமர்ந்து புகுந்தடியீர் வாழ்மின் என்றென் றருள்கொடுக்கும் *
படிக்கே ழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன் *
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவைபத்தும் *
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே
|
|
|
** நங்கள் வரிவளை யாயங் காளோ நம்முடை ஏதலர் முன்பு நாணி *
நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன் *
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன் *
வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே
|
|
|
இன்றிப்போக இருவினையுங்கெடுத்து *
ஒன்றியாக்கைபுகாமை உய்யக்கொள்வான் *
நின்றவேங்கடம் நீணிலத்துள்ளது *
சென்றுதேவர்கள் கைதொழுவார்களே
|
|
|
** மேயான் வேங்கடம் * காயா மலர்வண்ணன் *
பேயார் முலையுண்ட * வாயான் மாதவனே
|
|
|
** திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலே என்தலையே *
திருமால்வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே *
அருமா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே *
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே
|
|
|