Thiru Ayodhdhi ( Ayodhya – Ram Janmabhoomi )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
பெரியாழ்வார் | பெரியாழ்வார் திருமொழி | 6 |
குலசேகராழ்வார் | பெருமாள் திருமொழி | 4 |
தொண்டரடிப் பொடியாழ்வார் | திருப்பள்ளியெழுச்சி | 1 |
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 1 |
நம்மாழ்வார் | திருவாய்மொழி | 1 |
Total | 13 |
முடியொன்றி மூவுல கங்களும் ஆண்டு * உன்
அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த *
படியில் குணத்துப் பரதநம் பிக்கு * அன்று
அடிநிலை யீந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற
தார்க்குஇளந் தம்பிக்கு அரசீந்து * தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டு போகி * நுடங்கிடைச்
சூர்ப்ப ணகாவைச் செவியொடு மூக்கு * அவ
ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற அயோத்திக் கரசனைப் பாடிப்பற
காரார் கடலை யடைத்திட்டு இலங்கைபுக்கு *
ஓராதான் பொன்முடி ஒன்பதோ டொன்றையும் *
நேரா அவன்தம்பிக் கேநீ ளரசீந்த *
ஆரா வமுதனைப் பாடிப்பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற
வாரணிந்த முலைமடவாய் வைதேவீ விண்ணப்பம் *
தேரணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய் *
கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதன்னில் *
சீரணிந்த தோழமையைக் கொண்டதும்ஓ ரடையாளம்
மைத்தகுமா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம் *
ஒத்தபுகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத்தேட *
அத்தகுசீ ரயோத்தியர்கோன் அடையாள மிவைமொழிந்தான் *
இத்தகையால் அடையாளம் ஈதுஅவன்கை மோதிரமே
** வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி *
இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை *
தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி *
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே
சுற்றம் எல்லாம் பின் டிதாடரத் தொல் கானம் அடைந்தவனே *
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே *
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே *
சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ
ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே *
வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே *
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே *
ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ
** அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும் அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி *
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை *
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் *
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே
அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்
றன் * பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் *
செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள * ்
எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால் பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே
மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள் வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும் *
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை *
வாட்டிய வரிசிலை வானவ ரேறே மாமுனி வேள்வியைக் காத்து * அவ பிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே
கவள யானை பாய்புர வித்தே ரோட ரக்கரெல்லாம்
துவள * வென்ற வென்றி யாளன் றன்தமர் கொல்லாமே *
தவள மாடம் நீட யோத்தி காவலன் றன்சிறுவன் *
குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே
** கற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ *
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே *
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் *
நற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே