100-ThiruSalagramam


Thiru Salagramam ( Sri Srimoorthi Perumal Temple )

Azhwar Paasuram Count
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி 2
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 12

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.9.5

பாலைக் கறந்துஅடுப் பேற வைத்துப் பல்வளை யாள்என் மக ளிருப்ப *

மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்றுஇறைப் பொழுதுஅங்கே பேசி நின்றேன் *

சாளக் கிராம மு டைய நம்பிசாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான் *

ஆலைக்கரும்பின் மொழி யனைய அசோதைநங் காய்உன் மகனைக் கூவாய்


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.9

** வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி *

இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை *

தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி *

கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.5.1

** கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய் *

சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச்செறுக்களத்து *

மலைகொண்டலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கைவாளரக்கர் தலைவன் *

தலைபத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.5.2

கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும் *

உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான் *

இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும் *

தடம்சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடைநெஞ்சே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.5.3

உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும் *

நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி

வலவன் * வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்

சலவன் * சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.5.4

ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய *

தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான் *

பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற

தாரான் * தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.5.5

அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்

விடுத்தான் * விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான் நண்ணார்முன் *

கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத்

தடுத்தான் * தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.5.6

தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட

வாயான் * தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை

ஏயானிரப்ப * மூவடிமண்ணின்றெதாவென்று உலகேழும் தாயான் *

காயாமலர்வண்ணன் சாளக்கிராமமடைநெஞ்சே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.5.7

ஏனோரஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை *

ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன்தானேயிருசுடராய் *

வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாயலைநீருலகனைத்தும்

தானாய் * தானுமானாந்தன் சாளக்கிராமமடைநெஞ்சே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.5.8

வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து * ஓர்

சந்தார் தலைகொண்டுலகேழும் திரியும்பெரியோந்தான்சென்று * என்

எந்தாய் சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில் தந்தான் *

சந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.5.9

தொண்டாமினமுமிமையோரும் துணைநுல்மார்பினந்தணரும் *

அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம் *

வண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய *

தண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.5.10

** தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை *

காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை *

ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள *

பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே