104-ThiruVadamathura


Thiru Vadamathura ( Brindhavanam – Sri Govardhana Nesa Perumal Temple )

Azhwar Paasuram Count
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி 16
ஆண்டாள் திருப்பாவை 1
ஆண்டாள் நாச்சியார் திருமொழி 17
தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 3
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
நம்மாழ்வார் திருவாய்மொழி 10
Total 49

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.4

உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார் *

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார் *

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து * எங்கும்

அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.5.1

அட்டுக் குவிசோற் றுப்பருப் பதமும் தயிர்வா வியும்நெய் யளறும் அடங்கப்

பொட்டத் துற்றி * மா ரிப்பகை புணர்த்த பொருமா கடல்வண் ணன்பொறுத் தமலை *

வட்டத் தடங்கண் மடமான் கன்றினை வலைவாய்ப் பற்றிக் கொண்டு * குற மகளிர்

கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே


3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.5.2

வழுவொன் றுமிலாச் செய்கைவா னவர்கோன் வலிப்பட் டுமுனிந் துவிடுக் கப்பட்ட *

மழைவந்து எழுநாள் பெய்துமாத் தடுப்ப மதுசூ தன்எடுத் துமறித் தமலை *

இழவு தரியாத தோரீற் றுப்பிடி இளஞ்சீ யம்தொடர்ந் துமுடு குதலும் *

குழவி யிடைக்கா லிட்டெதிர்ந் துபொரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே


4   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.5.3

அம்மைத் தடங்கண் மடவாய்ச் சியரும் ஆனா யரும்ஆ நிரையும் அலறி *

எம்மைச் சரணேன் றுகொள்ளென் றிரப்ப இலங்கா ழிக்கையெந் தைஎடுத் தமலை *

தம்மைச் சரணென் றதம்பா வையரைப் புனமேய் கின்றமா னினம்காண் மினென்று *

கொம்மைப் புயக்குன் றர்சிலை குனிக்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே


5   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.5.4

கடுவாய்ச் சினவெங் கண்களிற் றினுக்குக் கவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல் *

அடிவா யுறக்கை யிட்டுஎழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டுநின் றமலை *

கடல்வாய்ச் சென்றுமே கம்கவிழ்ந் திறங்கிக்கதுவாய்ப் படநீர் முகந்தே றி * எங்கும்

குடவாய்ப் படநின் றும ழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே


6   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.5.5

வானத் திலுள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்துவாங் குமினென் பவன்போல் *

ஏனத் துருவா கியஈ சன்எந்தை இடவ னெழவாங் கியெடுத் தமலை *

கானக் களியா னைதன்கொம் பிழந்து கதுவாய் மதம்சோ ரத்தன்கை யெடுத்து *

கூனல் பிறைவேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே


7   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.5.6

செப்பா டுடைய திருமா லவன்தன் செந்தா மரைக்கை விரலைந் தினையும் *

கப்பா கமடுத் துமணி நெடுந்தோள் காம்பா கக்கொடுத் துக்கவித் தமலை *

எப்பா டும்பரந் திழிதெள் ளருவி இலங்கு மணிமுத் துவடம் பிறழ *

குப்பா யமென நின்றுகாட் சிதரும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே


8   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.5.7

படங்கள் பலவு முடைப்பாம் பரையன் படர்பூமி யைத்தாங் கிக்கிடப் பவன்போல் *

தடங்கை விரலைந் தும்மல ரவைத்துத் தாமோ தரன்தாங் குதட வரைதான் *

அடங்கச் சென்றுஇலங் கையையீ டழித்த அனுமன் புகழ்பா டித்தம்குட் டன்களை *

குடங்கைக் கொண்டுமந் திகள்கண் வளர்த்தும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே


9   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.5.8

சலமா முகில்பல் கணப்போர்க் களத்துச் சரமா ரிபொழிந் துஎங்கும்பூ சலிட்டு *

நலிவா னுறக்கே டகம்கோப் பவன்போல் நாரா யணன்முன் முகம்காத் தமலை *

இலைவேய் குரம்பைத் தவமா முனிவர் இருந்தார் நடுவே சென்றுஅணார் சொறிய *

கொலைவாய்ச் சினவேங் கைகள்நின் றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே


10   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.5.9

வன்பேய் முலையுண் டதோர்வா யுடையன் வன்தூ ணெனநின் றதோர்வன் பரத்தை *

தன்பே ரிட்டுக்கொண்டு தரணி தன்னில் தாமோ தரன்தாங் குதட வரைதான் *

முன்பே வழிகாட் டமுசுக் கணங்கள் முதுகில் பெய்துதம் முடைக்குட் டன்களை *

கொம்பேற் றியிருந் துகுதி பயிற்றும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே


11   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.5.10

கொடியே றுசெந்தா மரைக்கை விரல்கள் கோல மும்அழிந் திலவா டிற்றில *

வடிவே றுதிரு வுகிர்நொந் துமில மணிவண் ணன்மலை யுமோர்சம் பிரதம் *

முடியே றியமா முகிற்பல் கணங்கள் முன்னெற் றிநரைத் தனபோ ல * எங்கும்

குடியே றியிருந் துமழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே


12   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.5.11

** அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகையூர் தியவ னுடைய *

குரவிற் கொடிமுல் லைகள்நின் றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடைமேல் *

திருவிற் பொலிமா மறைவா ணர்புத்தூர்த் திகழ்பட் டர்பிரான் சொன்னமா லைபத்தும் *

பரவு மனநன் குடைப்பத் தருள்ளார் பரமா னவைகுந் தம்நண் ணுவரே


13   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.6.3

வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசுதே வன்மது ரைமன்னன் * நந்த

கோனிள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது *

வானிளம் படியர் வந்துவந் தீண்டி மனமுரு கிமலர்க் கண்கள் பனிப்ப *

தேனள வுசெறி கூந்த லவிழச் சென்னிவேர்ப் பச்செவி சேர்த்துநின் றனரே


14   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.2.4

ஆனாயர் கூடி அமைத்த விழவை * அமரர்தம்

கோனார்க் கொழியக் கோவர்த் தனத்துச்செய் தான்மலை *

வானாட்டில் நின்று மாமலர்க் கற்பகத் தொத்திழி *

தேனாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே


15   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.7.9

** வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி *

இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை *

தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி *

கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே


16   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.10.8

நான்ஏதும் உன்மாய மொன்ற றியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு * இந்த

ஊனே புகேயென்று மோதும் போதுஅங் கேதும்நான் உன்னை நினைக்க மாட்டேன் *

வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மாமாய னே * என்

ஆனாய்நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே


17   ஆண்டாள் – திருப்பாவை – 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் * தூய பெருநீர் யமுனைத் துறைவனை *

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத் * தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் *

தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது * வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் *

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் * தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்


18   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 4.5

மாட மாளிகை சூழ்மது ரைப்பதி

நாடி * நந்தெரு வின்நடு வேவந்திட்டு *

ஓடை மாமத யானை யுதைத்தவன் *

கூடு மாகில்நீ கூடிடு கூடலே


19   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 4.6

அற்ற வன்மரு தம்முறி யநடை

கற்ற வன் * கஞ் சனைவஞ் சனையினால்

செற்ற வன் * திக ழும்மது ரைப்பதி *

கொற்ற வன்வரில் கூடிடு கூடலே


20   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 6.5

கதிரொளி தீபம்க லசமு டனேந்தி *

சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள *

மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும் *

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்


21   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 7.3

தடவரை யின்மீதே சரற்கால சந்திரன் *

இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல் * நீயும்

வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில் *

குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே


22   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 12.1

** மற்றிருந் தீர்கட் கறியலாகா மாதவ னென்பதோ ரன்புதன்னை *

உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம் ஊமைய ரோடு செவிடர்வார்த்தை *

பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி *

மற்பொருந் தாமற் களமடைந்த மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின்


23   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 12.8

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியு மாகப்பெற்றான் *

பற்றியுரலிடை யாப்புமுண்டான் பாவிகாள் உங்களுக் கேச்சுக்கொலோ *

கற்றன பேசி வசையுணாதே காலிக ளுய்ய மழைதடுத்து *

கொற்றக் குடையாக வேந்திநின்ற கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின்


24   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 13.8

உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ வென்னாத *

கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால் *

கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் *

அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே


25   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 14.1

** பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய் *

இட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே *

இட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி *

விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே


26   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 14.2

அனுங்க வென்னைப் பிரிவுசெய் தாயர் பாடி கவர்ந்துண்ணும் *

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரே *

கணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல * வனமாலை

மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே


27   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 14.3

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை *

ஏலாப் பொய்க ளுரைப்பானை இங்கே போதக் கண்டீரே *

மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் *

மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே


28   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 14.4

கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயி றுபடுத்தி * என்னை

ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் றன்னைக் கண்டீரே *

போர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றேபோல் *

வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே


29   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 14.5

** மாத வன்என் மணியினை வலையில் பிழைத்த பன்றிபோல் *

ஏது மொன்றும் கொளத்தாரா ஈசன் றன்னைக் கண்டீரே *

பீதக வாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல் *

வீதி யார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே


30   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 14.6

தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல் *

புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே * உருவு

கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல் *

விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோமே


31   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 14.7

பொருத்த முடைய நம்பியைப் புறம்போ லுள்ளும் கரியானை *

கருத்தைப் பிழைத்து நின்றஅக் கருமா முகிலைக் கண்டீரே *

அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம்போல் *

விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே


32   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 14.8

வெளிய சங்கொன் றுடையானைப் பீதக வாடை யுடையானை *

அளிநன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரே *

களிவண் டெங்கும் கலந்தாற்போல் கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல் *

மிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே


33   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 14.9

** நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த நளிர்மா மலருந்தி *

வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் றன்னைக் கண்டீரே *

காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளு முடன்மடிய *

வேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே


34   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 14.10

** பருந்தாட் களிற்றுக் கருள்செய்த பரமன் றன்னை * பாரின்மேல்

விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதைசொல் *

மருந்தா மென்று தம்மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் *

பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப் பிரியா தென்று மிருப்பாரே


35   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை – 45

** வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள் *

கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை *

துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொ டிசொல் *

இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே


36   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.7.5

வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து *

கல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல் *

சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் *

நல்லார் மறையோர் பலர்வாழும் நறையூர் நின்ற நம்பியே


37   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.10

** மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை *

நன்னறையூர் நின்ற நம்பியை * வம்பவிழ்தார்

கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார் *

பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே


38   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.6

** நேசமி லாதவர்க் கும்நினை யாதவர்க் கும்மரியான் *

வாசம லர்ப்பொழில் சூழ்வட மாமது ரைப்பிறந்தான் *

தேசமெல் லாம்வணங் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற *

கேசவ நம்பிதன் னைக்கெண்டை யொண்கண்ணி காணுங்கொலோ


39   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 74

சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர் *

பாரோர் புகழும் வதரி வடமதுரை


40   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 7.10.4

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற *

வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந் நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை *

வாய்க்கும் பெரும்புகழ் மூவுல கீசன் வடமது ரைப்பிறந்த *

வாய்க்கும் மணிநிறக் கண்ணபி ரான்றன் மலரடிப் போதுகளே


41   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.5.9

இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறும் இருஞ்சிசிறைப்புள்

அதுவே * கொடியா வுயர்த்தானே! என்றென் றேங்கி யழுதக்கால் *

எதுவே யாகக் கருதுங்கொல் இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான் *

மதுவார் சோலை யுத்தர மதுரைப் பிறந்த மாயனே


42   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.1.3

பொருள்கையுண்டாய்ச்செல்லக்காணில் போற்றினெற்றேழுவர் *

இருள்கொள்துன்பத்திமைகாணில் என்னேயென்பாருமில்லை *

மருள் கொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப்பிறந்தாற்கு *

அருள் கொளாளாயுய்யவல்லால் இல்லைகண்டீரரணே


43   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.1.4

அரணமாவரற்றகாலைக்கு என்றென்றமைக்கப்பட்டார் *

இரணங்கொண்ட தெப்பராவர் இன்றியிட்டலுநஃதே *

வருணித்தென்னே வடமதுரைப்பிறந்த வன்வண்புகழே *

சரணென்றுய்யப்பபோகிலல்லால் இல்லைகண்டீர்சதிரே


44   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.1.5

சதிரமென்று நம்மைத்தாமே சம்மதித்தின்மொழியார் *

மதுரபோகம்துற்றவரே வைகிமற்றொன்றுறுவர் *

அதிகொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப்பிறந்தாற்கு *

எதிர்கொள்ளாயுய்யலல்லால் இல்லைகண்டீரின்பமே


45   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.1.6

இல்லைகண் டீரின்பமந்தோ உள்துநினையாதே *

தொல்லையார்களெத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார் *

மல்லைமூதூர் வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே *

சொல்லியுய்யப் போகிலல்லால் மற்றொன்றில்லை சுருக்கே


46   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.1.7

மற்றொன்றில்லை சுருங்கச்சொன்னோம் மாநிலத் தெவ்வுயிருக்கும் *

சிற்றவேண்டா சிந்திப்பேயமையும் கண்டீர் களந்தோ *

குற்றமன் றெங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தான் *

குற்றிமில் சீர்கற்றுவைதல் வாழ்தல் கண்டீர்குணயே


47   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.1.8

வாழ்தல்கண்டீர் குணமிதந்தோ மாயவண்டிபரவி *

போழ்துபோகவுள்ளநிற்கும் புன்மையிலாதவர்க்கு *

வாழ்துணையா வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே *

வீழ்துணையாப்போமிதனில் யாதுமில்லைமிக்கதே


48   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.1.9

யாதுமில்லை மிக்கதனில் என்றென்றது கருதி *

காதுசெய்வான் கூதைசெய்து கடைமுறை வாழ்க்கை யும்போம் *

மாதுகிலின் கொடிக் கொள்மாட வடமதுரைப் பிறந்த *

தாதுசேர்தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர்சரணே


49   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 9.1.10

கண்ணனல்லாலில்லை கண்டீர்சரண் அதுநிற்கவந்து *

மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப்பிறந்தான் *

திண்ணமாநும்முடைமையுண்டேல் அவனடிசேர்த்துய்மினோ *

எண்ணவேண்டாநும்மதாதும் அவனன்றிமற்றில்லையே