105-Thiruvaaipadi


Thiruvaaipadi ( Aayarpadi – Sri Navamohana Krishna Perumal Temple )

Azhwar Paasuram Count
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி 10
ஆண்டாள் திருப்பாவை 1
ஆண்டாள் நாச்சியார் திருமொழி 4
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 6
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
Total 22

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.2

ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார்ள *

நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார் *

பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று *

ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.4

உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார் *

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார் *

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து * எங்கும்

அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே


3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.2.5

தீயபுந்திக் கஞ்சன்உன்மேல் சினமுடையன் சோர்வுபார்த்து *

மாயந்தன்னால் வலைப்படுக் கில்வாழகில்லேன் வாசுதேவா *

தாயர்வாய்ச்சொல் தருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன் போகவேண்டா *

ஆயர்பாடிக் கணிவிளக்கே அமர்ந்துவந்துஎன் முலையுணாயே


4   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.3.7

முலையேதும் வேண்டேனென் றோடிநின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு *

மலையை யெடுத்து மகிழ்ந்துகல் மாரி காத்துப் பசுநிரை மேய்த்தாய் *

சிலையொன்று இறுத்தாய் திரிவிக் கிரமா திருவாயர் பாடிப் பிரானே *

தலைநிலாப் போதேஉன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே


5   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.1.9

தாய்மார் மோர்விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிறைப்பின்பு போவர் *

நீஆய்ப் பாடிஇளங் கன்னி மார்களை நேர்பட வேகொண்டு போதி *

காய்வார்க்கு என்றும் உகப்பன வேசெய்து கண்டார் கழறத் திரியும் *

ஆயா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே


6   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.2.2

பற்று மஞ்சள்பூசிப் பாவை மாரொடு பாடியில் *

சிற்றில் சிதைத்துஎங்கும் தீமை செய்து திரியாமே *

கற்றுத் தூளி யுடைவேடர் கானிடைக் கன்றின்பின் *

எற்றுக்குஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே


7   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.2.4

வண்ணக் கருங்குழல் மாதர் வந்துஅலர் தூற்றிட *

பண்ணிப் பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே *

கண்ணுக் கினியானைக்கா னதரிடைக் கன்றின்பின் *

எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே


8   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.2.6

மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப்போய் *

படிறு பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே *

கடிறு பலதிரி கா னதரிடைக் கன்றின்பின் *

இடறஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே


9   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.4.10

** விண்ணின் மீதுஅம ரர்கள்விரும் பித்தொழ மிறைத்துஆயர் பாடியில் வீதியூடே *

கண்ணங் காலிப்பின் னேஎழுந் தருளக் கண்டுஇளவாய்க் கன்னிமார் காமுற்ற

வண்ணம் * வண்டமர் பொழில்புது வையர்கோன் விட்டு சித்தன் சொன்ன மாலைபத்தும் *

பண்ணின்பம் வரப்பாடும் பத்த ருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே


10   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.6.7

புவியுள்நான் கண்டதோ ரற்புதம் கேளீர் பூணி மேய்க்கும்இளங் கோவலர் கூட்டத்து

அவையுள் * நாகத் தணையான்குழ லூத அமர லோகத் தளவும்சென் றிசைப்ப *

அவியுணா மறந்து வானவ ரெல்லாம் ஆயர் பாடி நிறையப்புகுந்து ஈண்டி *

செவியு ணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து  கோவிந்த னைத்தொடர்ந்து என்றும்வி டாரே


11   ஆண்டாள் – திருப்பாவை – 1

** மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் * நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் *

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் * கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் *

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் * கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் *

நாரா யணனே நமக்கே பறை தருவான் * பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்


12   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 12.2

நாணி யினியோர் கருமமில்லை நாலய லாரும் அறிந்தொழிந்தார் *

பாணியா தென்னை மருந்துசெய்து பண்டுபண் டாக்க வுறுதிராகில் *

மாணி யுருவா யுலகளந்த மாயனைக் காணில் தலைமறியும் *

ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில் ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின்


13   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 13.4

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும் *

காரே றுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை *

ஆரா வமுத மனையான்றன் அமுத வாயி லூறிய *

நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை நீக்கீரே


14   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 13.10

** அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக் கணிவிளக்கை *

வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை *

வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும் *

சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே


15   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 14.2

அனுங்க வென்னைப் பிரிவுசெய் தாயர் பாடி கவர்ந்துண்ணும் *

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரே *

கணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல * வனமாலை

மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே


16   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.4

** பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர் *

கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன் *

ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான் *

தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே


17   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.5.5

பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண் மையெழுதாள் பூவை பேணாள் *

ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும் *

நாண்மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி *

ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே


18   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.9.8

அம்பொனா ருலக மேழும் அறியஆய்ப் பாடி தன்னுள் *

கொம்பனார் பின்னை கோலம் கூடுதற் கேறு கொன்றான் *

செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப் பேருள் மேவும் *

எம்பிரான் நாமம் நாளும் ஏத்திநா னுய்ந்த வாறே


19   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.5.2

தந்தை தளைகழல்த் தோன்றிப்போய் * ஆய்ப்பாடி

நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் காணேடீ *

நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் நான்முகற்குத்

தந்தைகாண் * எந்தை பெருமான்காண் சாழலே


20   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.5.3

ஆழ்கடல்சூழ் வையகத்தா ரேசப்போய் * ஆய்ப்பாடித்

தாழ்குழலார் வைத்த தயிருண்டான் காணேடீ *

தாழ்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு * இவ்

வேழுலகு முண்டும் இடமுடைத்தால் சாழலே


21   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.5.4

அறியாதார்க் கானாய னாகிப்போய் * ஆய்ப்பாடி

உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தான் காணேடீ *

உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்த பொன்வயிறுக்கு *

எறிநீ ருலகனைத்து மெய்தாதால் சாழலே


22   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 28

ஆராத தன்மயனா ஆங்கொருநாள் ஆய்ப்பாடி *

சீரார்க் கலையல்குல் சீரடிச்செந்துவர்வாய்