Irumalu Roga


Irumalu Roga Muyalakan Vaatham Yeriguna Naasi Vidame

Neerizhivu Vidaatha Thalaivali Sogai Yezhukala Maalai Yivaiyode

Peruvayireelai Yerikulai soolai Peruvali Vaerum Ula Noigal

Piravigal Thorum Yenai Naliyaatha Padiyuna Thalgal Arulvaaye

Varum OruKodi Asurar Pathathi Madiya Anega Isaipaadi

Varum Oru Kaala Vayiravaraada Vadisudar Vaelai Viduvone

Tharunizhal Meethil Uraimugil Oorthi Tharuthiru Maathin Manavaala

Salamidai Poovi Naduvinil Veeru Thanimalai Maevu Perumaale

   

இருமலு ரோக முயலகன் வாதம் எரிகுண நாசி விடமே

நீரிழிவு விடாத தலைவலி சோகை எழுகள மாலை இவையோடே

பெருவயிறீளை எரிகுலை சூலை பெருவலி வேறும் உள நோய்கள்

பிறவிகள் தோறும் எனை நலியாத படியுன தாள்கள் அருள்வாயே

வரும் ஒருகோடி அசுரர் பதாதி மடிய அநேக இசைபாடி

வரும் ஒரு கால வயிரவராட வடிசுடர் வேலை விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி தருதிரு மாதின் மணவாளா

சலமிடை பூவி நடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே

   

Please leave your valuable suggestions and feedback here