Nama Parvathi Pathaye Hara Hara Mahadeva
Kallarndha Poongkondrai Madhamaththam Kathirmadhiyam
Ullaarntha Sadaimudiyem Perumaanaar Uraiyumidam
Thallaaya Sampaathi Sadaayenpaar Thaam Iruvar
Pullaanaar Karaiyanidam Pullirukku Vaeloorae
Sediyaaya Vudaltheerppaan Theevinaikkor Marundhaavaan
Podiyaadi Kadimaiseytha Pullirukku Vaeloorai
Kadiyaarndha Pozhirkaazhi Kavuniyansam Panthansol
Madiyaathu Sollavallaar Killaiyaam Marupirappae
Thiruchitrambalam
நம பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவா
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடம்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே
செடியாய உடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரை
கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே
திருச்சிற்றம்பலம்