கந்தர் அநுபூதி
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்
Meaning-காப்பு
நூல்
ஆடும் பரி வேல் அணிசேவல் என
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே
Meaning-1
உல்லாச நிராகுல யோக இத
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூபதியே
Meaning-2
வானோ புனல் பார் கனல் மாருதமோ
ஞானோ தயமோ நவில் நான் மறையோ
யானோ மனமோ எனை ஆண்ட இடம்
தானோ பொருளாவது சண்முகனே
Meaning-3
வளைபட்ட கைம் மாதொடு மக்கள் எனும்
தளைபட்டு அழிய தகுமோ தகுமோ
கிளைபட்டு எழு சூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே
Meaning-4
மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை மடந்தையர் என்று அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே
Meaning-5
திணியான மனோ சிலை மீது உனதாள்
அணியார் அரவிந்தம் அரும்பு மதோ
பணியார் என வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே
Meaning-6
கெடுவாய் மனனே கதி கேள் கரவாது
இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே
Meaning-7
அமரும் பதி கேள் அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தான் அவ நாசகனே
Meaning-8
மட்டூர் குழல் மங்கையர் மையல் வலை
பட்டு ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்பயனே
Meaning-9
கார் மா மிசை காலன் வரில் கலப
தேர்மா மிசை வந்து எதிரப் படுவாய்
தார் மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே
Meaning-10
கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
முருகன் தனிவேல் முனி நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று அரு அன்று உளது அன்று இலது அன்று
இருள் அன்று ஒளி அன்று என நின்றதுவே
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குண பஞ்சரனே
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முது சூர் பட வேல் எறியும்
சூரா சுர லோக துரந்தரனே
யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே
உதியா மரியா உணரா மறவா
விதி மால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
பதி காவல சூர பயங் கரனே
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்ரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே
கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுர சூர விபாடணன
காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே
அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரம வேல் மகிபா குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல புரந்தர பூபதிய
மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயில் ஏறிய சேவகனே