Kapaleeswarar Temple Vazhipadu Mandiram (Full Version – Lyrics in English)
கபாலீசுவரர் ஆலையம் வழிபாடு மந்திரங்கள் (Full Version – Lyrics in Tamil)
Om Agaramena Nirpaai Porri
Om Arugu Choodiya Amala Porri
Om Aanaimugathane Porri
Om Unmaiyarul Ulloliye Porri
Om Aindhu Karathane Porri
Om Karpaga Vinayaga Porri
Om Nardhana Vinayaga Porri
Om Sangathamizh Tharuvay Porri
Om Vaitha Maanidhiye Porri Porri
ஓம் அகரமென நிற்பாய் போற்றி
ஓம் அறுகு சூடிய அமலா போற்றி
ஓம் ஆனைமுகத்தனே போற்றி
ஓம் உண்மையருள் உள்ளொளியே போற்றி
ஓம் ஐந்து கரத்தனே போற்றி
ஓம் கற்பக விநாயகா போற்றி
ஓம் நர்த்தன விநாயகா போற்றி
ஓம் சங்கத்தமிழ் தருவாய் போற்றி
ஓம் வைத்த மாநிதியே போற்றி போற்றி
Thennadudaiya Sivane Porri
Ennattavarkkum Iraiva Porri
Thenthillai Manrinul Aadi Porri
Inrenakku Aaramudham Aanay Porri
Aadaka Madurai Arase Porri
Koodal Ilangu Kurumani Porri
Annamalai Em Anna Porri
Kannaramudha Kadale Porri
Thirukkazhu Kundril Selva Porri
Poruppu Amar Poovanathu Arane Porri
Aroor Amarndha Arase Porri
Seerar Thiruvaiyara Porri
Kan Thulanga Kamanai Mun Kayndhay Porri
Kaar Kedilam Konda Kapali Porri
Kaavaay Kanagath Thirale Porri
Myilai Kayilai Malaiyane Porri Porri
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணாரமுதக் கடலே போற்றி
திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
கண் துளங்க காமனை முன் காய்ந்தாய் போற்றி
கார் கெடிலம் கொண்ட கபாலி போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
மயிலை கயிலை மலையானே போற்றி போற்றி
Yegampathurai Enthay Porri
Paagam Pen Uruvanay Porri
Paagam Piriya Paraparai Porri
Aagamamudimel Amarnthay Porri
Idarai Kalaiyum Enthay Porri
Sudaray Vilangum Thoomani Porri
Illaga Vilakkaam Iraivi Porri
Nallaga Vilakkaam Nayagi Porri
Theedhu Ellam Theerkkum Thiruve Porri
Aarudhal Emakku Alippay Porri
Thaaye Malaimagale Nin Arul Thandharul Porri
Thooyanin Thiruvadi Thozhudhanam Porri
Karpaganai Kadantha Karunaiye Porri
Karpagambigai Thaye Porri Porri
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உருவானாய் போற்றி
பாகம் பிரியா பராபரை போற்றி
ஆகமமுடிமேல் அமர்ந்தாய் போற்றி
இடரைக் களையும் எந்தாய் போற்றி
சுடராய் விளங்கும் தூமணி போற்றி
இல்லக விளக்காம் இறைவி போற்றி
நல்லக விளக்காம் நாயகி போற்றி
தீது எல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
ஆறுதல் எமக்கு அளிப்பாய் போற்றி
தாயே மலைமகளே நின் அருள் தந்தருள் போற்றி
தூயநின் திருவடி தொழுதனம் போற்றி
கற்பகனைக் கடந்த கருணையே போற்றி
கற்பகாம்பிகைத் தாயே போற்றி போற்றி
Verrivel Muruganukku Aro Hara
Singaravelarukku Aro Hara
Sivasubiramaniya Swamikku Aro Hara
Thirupparankundra Theeranukku Aro Hara
Thiruchendhur Devanukku Aro Hara
Thiru Aavinan Kudiyanukku Aro Hara
Thiruveraga Balaganukku Aro Hara
Thiruthanigai Tamizhukku Aro Hara
Pazhamudir Solai Kizhavanukku Aro Hara
Kadhir Kama Velanukku Aro Hara
Kunriladum Kumaranukku Aro Hara
Kuncharithan Kanavanukku Aro Hara
Valli Kaandhanukku Aro Hara
Anbargalin Neyanukku Aro Hara
Yettukkudi Yendhaikku Aro Hara
Kandhappa Swamikku Aro Hara
Engum Nirai Iraivanukku Aro Hara
Arunagiri Nadhanukku Aro Hara
வெற்றிவேல் முருகனுக்கு அரோ ஹரா
சிங்காரவேலருக்கு அரோ ஹரா
சிவசுப்பிரமணிய சுவாமிக்கு அரோ ஹரா
திருப்பரங்குன்ற தீரனுக்கு அரோ ஹரா
திருச்செந்தூர் தேவனுக்கு அரோ ஹரா
திரு ஆவினன் குடியனுக்கு அரோ ஹரா
திருவேரக பாலகனுக்கு அரோ ஹரா
திருத்தணிகை தமிழுக்கு அரோ ஹரா
பழமுதிர்ச் சோலை கிழவனுக்கு அரோ ஹரா
கதிர் காம வேலனுக்கு அரோ ஹரா
குன்றிலாடும் குமரனுக்கு அரோ ஹரா
குஞ்சரிதன் கணவனுக்கு அரோ ஹரா
வள்ளி காந்தனுக்கு அரோ ஹரா
அன்பர்களின் நேயனுக்கு அரோ ஹரா
எட்டுக்குடி எந்தைக்கு அரோ ஹரா
கந்தப்ப சுவாமிக்கு அரோ ஹரா
எங்கும் நிறை இறைவனுக்கு அரோ ஹரா
அருணகிரி நாதனுக்கு அரோ ஹரா