Kariya Periya Yerumai Kadavu
Kadiya Kodiya Thirisoolan
Karuvi Irugu Kayiro Duyirgal
Kazhiya Mudugi Ezhukaalan
Thiriyum Nariyum Yeriyum Urimai
Theriya Viravi Anugaadhe
Serivum Arivum Uravum Anaiya
Thigazhum Adigal Tharavaenum
Pariya Varaiyin Arivai Maruvu
Paramar Arulum Murugone
Pazhana Muzhavar Kozhuvil Yezhudhu
Pazhaiya Pazhani Amarvone
Ariyum Ayanum Veruva Uruva
Ariya Giriyai Yerivone
Ayilum Mayilum Aramum Niramum
Azhagum Udaiya Perumaale
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய திரிசூலன்
கறுவி இறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி எழுகாலன்
திரியும் நரியும் எரியும் உரிமை
தெரிய விரவி அணுகாதே
செறிவும் அறிவும் உறவும் அனைய
திகழும் அடிகள் தரவேணும்
பரிய வரையின் அரிவை மருவு
பரமர் அருளும் முருகோனே
பழன முழவர் கொழுவில் எழுது
பழைய பழநி அமர்வோனே
அரியும் அயனும் வெருவ உருவ
அரிய கிரியை எறிவோனே
அயிலும் மயிலும் அறமும் நிறமும்
அழகும் உடைய பெருமாளே