Karuvin Uruvaagi Vandhu Vayadhalavile Valarndhu
Kalaigal Palave Therindhum Adhanaale
Kariyakuzhal Maadhar Thangal Adisuvadu Maarbudhaindhu
Kavalai Peridhaagi Nondhu Migavaadi
Arahara Sivaaya Vendru Dhinamum Ninaiyaamal Nindru
Arusamaya Needhi Ondrum Ariyaamal
Asanamidu Vaargal Thangal Manaigalthalai Vaasal Nindru
Anudhinamum Naanam Indri Azhiveno
Uragapada Melvalarndha Periyaperumaal Arangar
Ulagalavu Maal Magizhndha Marugone
Ubayakula Dheepa Thunga Virudhukavi Raaja Singa
Uraipugaliyooril Andru Varuvone
Paravaimanai Meedhi Landru Orupozhudhu Thoodhu Sendra
Paramanaru Laal Valarndha Kumaresaa
Pagaiasurar Senai Kondru Amararsirai Meela Vendru
Pazhanimalai Meedhil Nindra Perumaale
கருவின் உருவாகி வந்து வயதளவிலே வளர்ந்து
கலைகள் பலவே தெரிந்தும் அதனாலே
கரியகுழல் மாதர் தங்கள் அடிசுவடு மார்புதைந்து
கவலை பெரிதாகி நொந்து மிகவாடி
அரகர சிவாய வென்று தினமும் நினையாமல் நின்று
அறுசமய நீதி யொன்றும் அறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ
உரகபட மேல்வளர்ந்த பெரியபெருமாள் அரங்கர்
உலகளவு மால் மகிழ்ந்த மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலியூரில் அன்று வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனருளால் வளர்ந்த குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே