Pakkarai Vichithramani Porkalanai Ittanadai
Patchiyenum Ugra Thuragamu Neeba
Pakkuva Malarththodaiyum Akkuvadu Pattozhiya
Patturuva Vittarulgai Vadivelum
Dhikkadhuma Dhikkavaru Kukkudamum Ratchaitharu
Chitradiyum Mutriya Pannirutholum
Seyppadhiyum Vaiththu Uyar Thiruppugazh Viruppamodu
Seppena Yenakkarulgai Maravene
Ikkavarai Narkanigal Sarkkarai Paruppudan Nei
Etporiyaval Thuvarai Ilaneer Vandu
Yechchilpayar Appavagai Pachcharisi Pittu Vellari
Ippazham Idippalvagai Thanimoolam
Mikkaadi Sirkadalai Bhathanam Yenakkoloru
Vikkinasa Marththanenum Arulaazhi
Verpagudi Lachchadila Virparamar Appararul
Viththaga Maruppudaiya Perumaale
பக்கரை விசித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனும் உக்ர துரகமு நீப
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியும் முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எட்பொரியவல் துவரை இளநீர் வண்டு
எச்சில்பயற் அப்பவகை பச்சரிசி பிட்டு வெள்ளரி
இப்பழம் இடிப்பல்வகை தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணம் எனக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரமர் அப்பரருள்
வித்தக மருப்புடைய பெருமாளே