SakalakalaValli Maalai



 

SakalakalaValli Maalai – Lyrics in English (Full Version)

    

 

சகலகலாவல்லி மாலை – Lyrics in Tamil (Full Version)

    

Ready Reckoner


 

Verse-1

 

VenThaamaraikku Andri NinPadam Thaanga Yen Vellai Ulla

ThannThamaraikku Thagaathu Kolo Sagam Yezhum Aliththu

Undaan Uranga Ozhithaan Piththaaga Undaakkum Vannam

Kandaan Suvaikol Karumbae SakalakalaValliye

 

    

 

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ள

தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து

உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே

 

    

 

Verse-2

 

Naadum Porutsuvai SorSuvai ThoyThara NaarKaviyum

Paadum Paniyil Panitharulvaay Pangaya Aasanaththil

Koodum PasumPor Kodiyae KanaThana Kundrum iympaal

Kaadum Sumakkum Karumbae SakalakalaValliye

 

    

 

நாடும் பொருள்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்து அருள்வாய் பங்கய ஆசனத்தில்

கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்

காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே

 

    

 

Verse-3

 

Alikkum Sezhunthamizh Thellamudhu Aarthu Un Arul Kadalil

Kulikkum Padikku Endru Koodum Kolo Ulam Kondu Thelli

Thelikkum Panuvar Pulavor KaviMazhai Sinthakkandu

Kalikkum Kalaabha Mayile SakalakalaValliye

 

    

 

அளிக்கும் செழுந்தமிழ் தெள்ளமுது ஆர்ந்து உன் அருள் கடலில்

குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ உளம் கொண்டு தெள்ளி

தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு

களிக்கும் கலாப மயிலே சகலகலாவல்லியே

 

    

 

Verse-4

 

Thookkum Panuvar ThuraiThoyndha Kalviyum SorSuvai Thoy

Vaakkum Peruga Panithu Arulvaay Vada NoorKadalum

Thekkum Sezhunthamizh Selvamum Thondar Sennaavil Nindru

Kaakum Karunai Kadalae SakalakalaValliye

 

    

 

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்

வாக்கும் பெருக பணித்து அருள்வாய் வட நூற்கடலும்

தேக்கும் செழுந்தமிழ் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று

காக்கும் கருணை கடலே சகலகலாவல்லியே

 

    

 

Verse-5

 

PanjaPidhaTharu SeyyaPor Paada Pangeruham

Yen Nenja Thadathu Thalarathathu Yenne Nedunthaal Kamalathu

Thanja Thuvasam Uyarthon Sennauvum Agamum Vellai

Kanja Thavisu Othirundhaay SakalakalaValliye

 

    

 

பஞ்சப்பிததரு செய்யபொற் பாத பங்கேருகம்

என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே நெடுந்தாள் கமலத்து

தஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளை

கஞ்சத் தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே

 

    

 

Verse-6

 

Pannum Bharathamum Kalviyum Theenchol Panuvalum

Yaan Yennum Pozhuthu Yelithu Yeidha Nalgaay Yezhutha Marayum

Vinnum Puviyum Punalum Kanalum Vengaalum

Anbar Kannum Karuththum Nirainthaay SakalakalaValliye

 

    

 

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும்

யான் எண்ணும் பொழுதுஎளிது எய்த நல்காய் எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங் காலும்

அன்பர் கண்ணும் கருத்து நிறைந்தாய் சகலகலாவல்லியே

 

    

 

Verse-7

 

Paattum Porulum Porulaal Porunthum Payanum Yenpaal

Kootom PadiNin Kadaikkan Nalgay Ulam Kondu Thondar

Theetum Kalai Thamizh Theempaal Amudham Thelikkum Vannam

Kaattum Vel OThimapPaedae SakalakalaValliye

 

    

 

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்

கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்

தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்

காட்டும்வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே

 

    

 

Verse-8

 

SolvirPanamum AvaDhanamum Kavi SollaValla

NalVidhayum Thandhu AdimaiKolvay Nalina Aasanamser

Selvikkarithu Yendru OruKaalamum Sidhayamai Nalgum

Kalvi Perum Selva Paerae SakalakalaValliye

 

    

 

சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல

நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய் நளின ஆசனம்சேர்

செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்

கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகலகலாவல்லியே

 

    

 

Verse-9

 

Sorkkum Porutkkum Uyiraam MeyNyaanathin Thottram Yenna

Nirkindra Ninnai Ninaippavar Yaar Nilam Thoy Puzhaikkai

Narkuncharathin Pidiyodu Arasa Annam Naana

Nadai Karkkum Padam Buyaththaaye SakalakalaValliye

 

    

 

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ் ஞானத்தின் தோற்றம் என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம் தோய் புழைக்கை

நற்குஞ் சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண

நடை கற்கும் பதாம்புயத் தாயே சகலகலாவல்லியே

 

    

 

Verse-10

 

ManKanda VenKudai Keezhaaga Merpatta Mannanum

Yen PanKanda Alavil Paniya Seyvay Padaippon Mudalaam

VinKanda Deivam Pala Kodi Undenum Vilimbil

UnPol KanKanda Deivam Ulatho SakalakalaValliye

 

    

 

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னனும்

என் பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம்பல கோடி உண்டேனும் விளிம்பில்

உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலாவல்லியே

 

    

 

Please leave your valuable suggestions and feedback here