Segamaayai Utren Agavazhvil Vaiththa
Thirumadhu Gerbam Udaloori
Dhesamaadha Mutri Vadivaai Nilaththil
Thiramaai Aliththa Porulaagi
Magavavin Uchchi Vizhi Ananaththil
Malainer Buyaththil Uravaadi
Madimeedhaduththu Vilaiyaadi Niththam
Manivaayin Muththi …… Tharavenum
Mugamaya Mitta Kuramaadhinukku
Mulaimel Anaikka Varu Needha
Mudhuma Maraikkul Oruma Porutkul
Mozhiye Uraiththa Gurunathaa
Thagaiyadhu Enakkun Adikaana Vaiththa
Thaniera Gaththin Murugone
Tharu Kaavirikku Vada Paarisaththil
Samarvel Eduththa Perumale
செகமாயை உற்றென் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறி
தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த பொருளாகி
மகவாவின் உச்சி விழி ஆநநத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி
மடிமீதடுத்து விளையாடி நித்தம்
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதினுக்கு
முலைமேல் அணைக்க வருநீதா
முதுமா மறைக்குள் ஒருமா பொருட்குள்
மொழியே உரைத்த குருநாதா
தகையாது எனக்குன் அடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தரு காவிரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேல் எடுத்த பெருமாளே