Thandayani Vendayam


 

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் றன்புபோல

 

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் சந்தியாவோ

 

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூர

 

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே

 

   

 

Please leave your valuable suggestions and feedback here