Thiruneelakanta Padhigam-TA


திருநீலகண்ட பதிகம்

 

Full Version
   

Full Version – பாராயண முறை
   

Ready Reckoner


1   திருநீலகண்ட பதிகம்-1

 

திருச்சிற்றம்பலம்

 

அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃதறிவீர்

உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே

கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

 

   

பாராயண முறை

   

2   திருநீலகண்ட பதிகம்-2

 

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும்

பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்

தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

 

   

பாராயண முறை

   

3   திருநீலகண்ட பதிகம்-3

 

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்

விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்

இலைத்தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்

சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா திரு நீலகண்டம்

 

   

பாராயண முறை

   

4   திருநீலகண்ட பதிகம்-4

 

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்

புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே

கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழல் அடைந்தோம்

திண்ணிய தீவினை தீண்டப்பெறா திரு நீலகண்டம்

 

   

பாராயண முறை

   

5   திருநீலகண்ட பதிகம்-5

 

மற்றிணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்

கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ

சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்

செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

 

   

பாராயண முறை

   

6   திருநீலகண்ட பதிகம்-6

 

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி

பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்

பறித்த மலர்கொடு வந்துமை ஏத்தும் பணி அடியோம்

சிறப்பிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

 

   

பாராயண முறை

   

7   திருநீலகண்ட பதிகம்-7

 

கருவை கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே

உருகி மலர்கொடு வந்துமை ஏத்துதும் நாம் அடியோம்

செரு இல் அரக்கனை சீரில் அடர்த்து அருள்செய்தவரே

திருவிலி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

 

   

பாராயண முறை

   

8   திருநீலகண்ட பதிகம்-8

 

நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து

தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வரியீர்

தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்

சீற்றமதாம் வினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்

 

   

பாராயண முறை

   

9   திருநீலகண்ட பதிகம்-9

 

சாக்கிய பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்

பாக்கியம் இன்றி இருதலை போகமும் பற்றுவிட்டார்

பூக்கமழ் கொன்றை புரிசடையீர் அடி போற்றுகின்றோம்

தீக்குழித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

 

   

பாராயண முறை

   

10   திருநீலகண்ட பதிகம்-10

 

பிறந்த பிறவியில் பேணி எம்செல்வன் கழலடைவான்

இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்

திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே

 

திருச்சிற்றம்பலம்

 

   

பாராயண முறை

   

Please leave your valuable suggestions and feedback here