Vindhadhinoori Vandhadhu Kaayam


 

வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வா வா முருகா அரோகரா

 

விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி யினிமேலோ

விண்டுவி டாம லுன்பத மேவு விஞ்சையர் போல அடியேனும்

 

வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான வடிவாகி

வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத மலர்தாராய்

 

எந்தனு ளேக செஞ்சுட ராகி யென்கணி லாடு தழல்வேணி

எந்தையர் தேடு மன்பர்ச காய ரெங்கள்சு வாமி யருள்பாலா

 

சுந்தர ஞான மென்குற மாது தன்றிரு மார்பி லணைவோனே

சுந்தர மான செந்திலில் மேவு கந்தசு ரேசர் பெருமாளே

 

   

 

Please leave your valuable suggestions and feedback here