Aathichudi-1


Aathichudi – ஆத்திசூடி ( உயிர் வருக்கம் )


அறம் செய விரும்பு Aram seya virumbu தருமம் செய்ய நீ விரும்புவாயாக Have desire to do good deeds
ஆறுவது சினம் Aaruvathu sinam கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும் Anger should be controlled
இயல்வது கரவேல் Iyalvathu karavel உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு Help to your best possible extent
ஈவது விலக்கேல் Eevathu vilakkel ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை வேண்டாமென்று தடுக்காதே Don’t stop someone from doing charity
உடையது விளம்பேல் Udaiyathu vilambel உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே Do not boast about your possession
ஊக்கமது கைவிடேல் Ookamathu kaividel எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது Do not give up hope/self-confidence
எண் எழுத்து இகழேல் Enn ezhuthu egazhael எண்ணும் எழுத்தும் இன்றியமையாதன, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே Do not underestimate the power of learning
ஏற்பது இகழ்ச்சி Yerpathu egazhchi யாசித்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது To accept alms is a shameful act
ஐயமிட்டு உண் Iyam ittu un யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும் Before eating, share food with those who need
ஒப்புரவு வொழுகு Oppuravu ozhugu உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள் Get along with the world
ஓதுவது ஒழியேல் Odhuvathu ozhiyel நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு Never stop learning
ஒள ஒளவியம் பேசேல் Aovviyam pesael ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே Never envy or talk bad about others
அஃகஞ் சுருக்கேல் Ahkham surukael அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே Do not be stingy in selling food grains

Please leave your valuable suggestions and feedback here