Aathichudi-2


   Aathichudi Full Version
   

 

Aathichudi Ready Reckoner


Aathichudi – ஆத்திசூடி Introduction


உயிர் வருக்கம் – Uyir Varukkam
    

அறம் செய விரும்பு Aram seya virumbu தருமம் செய்ய நீ விரும்புவாயாக Have desire to do good deeds

ஆறுவது சினம் Aaruvathu sinam கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும் Anger should be controlled

இயல்வது கரவேல் Iyalvathu karavel உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு Help to your best possible extent

ஈவது விலக்கேல் Eevathu vilakkel ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை வேண்டாமென்று தடுக்காதே Don’t stop someone from doing charity

உடையது விளம்பேல் Udaiyathu vilambel உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே Do not boast about your possession

ஊக்கமது கைவிடேல் Ookamathu kaividel எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது Do not give up hope/self-confidence

எண் எழுத்து இகழேல் Enn ezhuthu egazhael எண்ணும் எழுத்தும் இன்றியமையாதன, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே Do not underestimate the power of learning

ஏற்பது இகழ்ச்சி Yerpathu egazhchi யாசித்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது To accept alms is a shameful act

ஐயமிட்டு உண் Iyam ittu un யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும் Before eating, share food with those who need

ஒப்புரவு வொழுகு Oppuravu ozhugu உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள் Get along with the world

ஓதுவது ஒழியேல் Odhuvathu ozhiyel நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு Never stop learning

ஒள ஒளவியம் பேசேல் Aovviyam pesael ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே Never envy or talk bad about others

அஃகஞ் சுருக்கேல் Ahkham surukael அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே Do not be stingy in selling food grains


Aathichudi – உயிர்மெய் வருக்கம் Introduction


உயிர்மெய் வருக்கம் – Uyirmei Varukkam
    

கண்டொன்று சொல்லேல் Kandu Ondru Sollel கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே Tell exactly what you saw

ஙப் போல் வளை Ngappol Valai ‘ங’ என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.”ங” என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் Preserve the bonds

சனி நீராடு Sani Neeradu சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும் shower with clean cold water

ஞயம்பட உரை Nyayam Pada Urai கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு Speak nice and sweet

இடம்பட வீடு எடேல் Idampada Veedu Yedel உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே Build your house meeting your needs

இணக்கம் அறிந்து இணங்கு Inakkam Arinthu Inangu ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும் Make friend with the best (behaviour and character)

தந்தை தாய்ப் பேண் Thanthai Thaai Pean உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று Care and protect your parents

நன்றி மறவேல் Nandri Maravel ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே Do not forget timely help offered / gratitude

பருவத்தே பயிர் செய் Paruvathe Payir Sei எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும் Do things in the right time

மண் பறித்து உண்ணேல் Man Parithu Unnel பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே Do not grab other’s land for your needs

இயல்பு அலாதன செய்யேல் Iyalbu Alaathana Seyyel நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே Do not involve yourself in bad deeds

அரவம் ஆட்டேல் Aravam Aattel பாம்புகளை பிடித்து விளையாடாதே Do not play with snakes

இலவம் பஞ்சில் துயில் Ilavam Panjil Thuyil இலவம் பஞ்சு’ எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு Sleep on silk cotton bed

வஞ்சகம் பேசேல் Vanjagam Pesel உண்மைக்கு புறம்பான சொற்களை பேசாதே Do not utter mean / cunning words

அழகு அலாதன செய்யேல் Azhagu Alaathana Seyyel இழிவான செயல்களை செய்யாதே Never do unpleasant things

இளமையில் கல் Ilamaiyil Kal இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை(இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள் Learn when you are young

அறனை மறவேல் Aranai Maravel தருமத்தை எப்போதும் மறவாமல் செய் Do not forget charity

அனந்தல் ஆடேல் Ananthal Aadel மிகுதியாக துங்காதே Do not sleep long hours


Aathichudi – ககர வருக்கம் Introduction


ககர வருக்கம் – Kagara Varukkam
    

கடிவது மற Kadivathu Mara யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே Never hurt people with bad words

கா காப்பது விரதம் Kaapathu Viratham தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும். பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும் Keep up your vows

கி கிழமைப் பட வாழ் Kizhamaipada Vaazh உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ With your health and wealth, do best to others

கீ கீழ்மை அகற்று Keezhmai Agatru இழிவான குணஞ் செயல்களை நீக்கு Stay out of vulgar actions

கு குணமது கைவிடேல் Gunamathu Kaividel நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை கைவிடேல் Don’t give up good character

கூ கூடிப்பிரியேல் Koodi Piriyel நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே Do not give up good friends

கெ கெடுப்பது ஒழி Kedupathu Ozhi பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே Do not involve in actions that creates trouble for others

கே கேள்வி முயல் Kelvi Muyal கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய் Listen to good and valuable advice

கை கைவினை கரவேல் Kaivinai Karavel உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும் Do not hide knowledge about handicrafts

கொ கொள்ளை விரும்பேல் Kollai Virumbel பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே Do not rob

கோ கோதாட்டு ஒழி Kodhatu Ozhi குற்றமான விளையாட்டை விட்டு விடு Leave playing illegal games

கெள கெளவை அகற்று Kavvai Agatru வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு Eliminate troubles in life


Aathichudi – சகர வருக்கம் Introduction


சகர வருக்கம் – Sagara Varukkam
    

சக்கர நெறி நில் Sakkara Neri Nil அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும் Follow your government rules

சா சான்றோர் இனத்து இரு Sandrol Inathu Iru அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு Associate with scholars / wise people

சி சித்திரம் பேசேல் Sithiram Pesael பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே Do not speak lie as truth

சீ சீர்மை மறவேல் Seermai Maravel புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே Do not forget righteousness

சு சுளிக்கச் சொல்லேல் Sulikka Sollel கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர் Do not use hurting words

சூ சூது விரும்பேல் Soodhu Virumbel ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே Don’t be interested in gambling

செ செய்வன திருந்தச் செய் Seivana Thirundha Sei செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும் Do things with perfection

சே சேரிடம் அறிந்து சேர் Seridam Arinthu Saer நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு Choose wise company / friends

சை சையெனத் திரியேல் Saiyenath Thiriyel பெரியோர் ‘ச்சீ’ என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே Avoid being insulted because of uselessness

சொ சொற் சோர்வு படேல் Sor Sorvu Padel பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே Do not speak conversation with wrong or bad words

சோ சோம்பித் திரியேல் Sombi Thiriyel முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே Don’t be lazy


Aathichudi – தகர வருக்கம் Introduction


தகர வருக்கம் – Thagara Varukkam
    

தக்கோன் எனத் திரி Thakkon ena thiri பெரியோர்கள் உன்னைத் நல்லவன் என்று புகழும்படி நடந்துக்கொள் Let others feel you are trustworthy and good

தா தானமது விரும்பு Thaanamathu virumbu யாசிப்பவர்களுக்கு தானம் செய் Offer charity and alms

தி திருமாலுக்கு அடிமை செய் Thirumaalukku adimmai sei கடவுளுக்கு தொண்டு செய் Serve God

தீ தீவினை அகற்று Theevinai agattru பாவச் செயல்களைச் செய்யாமல் இரு Don’t commit sins

து துன்பத்திற்கு இடம் கொடேல் Thunpatthirkku idam kodel முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே Do not allow suffering

தூ தூக்கி வினை செய் Thookki vinnai sei ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும் Think very well before you act

தெ தெய்வம் இகழேல் Theivam ikazhel கடவுளை பழிக்காதே Do not disregard the supreme divine

தே தேசத்தோடு ஒட்டி வாழ் Theysathoodu otti vaazh உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ் Live and adopt your country’s livelihood

தை தையல் சொல் கேளேல் Thaiyal sol kelel மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே Do not trust girl’s words as expressed

தொ தொன்மை மறவேல் Thonnmai maravel பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே Do not forget old / past antiquities

தோ தோற்பன தொடரேல் Thorpena thodarel ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே Should know when to give up if sure of defeat


Aathichudi – நகர வருக்கம் Introduction


நகர வருக்கம் – Nagara Varukkam
    

நன்மை கடைப்பிடி Nanmai Kadaipidi நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும் Stick / Continue doing good deeds

நா நாடு ஒப்பன செய் Naadu Oppana Sei நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய் Perform acts that are agreeable to your nation

நி நிலையில் பிரியேல் Nilaiyil Piriyel உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே Don’t give up on principles

நீ நீர் விளையாடேல் Neer Vilayaadel வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே Do not play in bigger waters (like dam, river)

நு நுண்மை நுகரேல் Nunmai Nugarel நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே Do not eat food items that can cause illness

நூ நூல் பல கல் Nool Pala Kal அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி Have desire to learn more

நெ நெற்பயிர் விளைவு செய் Nel Payir Vilavu Sei நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ் Perform agriculture (ex: paddy cultivation)

நே நேர்பட ஒழுகு Nerpada Ozhugu ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட Be honest and truthful

நை நைவினை நணுகேல் Naivinai Nanugel பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே Do not do anything that is destructive

நொ நொய்ய உரையேல் Noyya Uraiyel பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே Do not speak abusive language

நோ நோய்க்கு இடம் கொடேல் Noikku Idam Kodel மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே Do not give room for disease


பகர வருக்கம் – Pagara Varukkam
    

பழிப்பன பகரேல் Pazhippena Pagarel பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே Do not use vulgar language

பா பாம்பொடு பழகேல் Pambodu Pazhagel பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே Keep away from snakes

பி பிழைபடச் சொல்லேல் Pizhaipada Sollel குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே Speak clear with no mistakes

பீ பீடு பெற நில் Peedu Pera Nil பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில் Others should honour your actions

பு புகழ்ந்தாரைப் போற்றி வாழ் Pugazhdhaarai Potri Vazh உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ் Protect those who appreciate you

பூ பூமி திருத்தி உண் Boomi Thiruthi Un விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண் Cultivate the land and feed

பெ பெரியாரைத் துணைக் கொள் Periyarai Thunai Kol அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள் Seek help from old, great and wise people

பே பேதைமை அகற்று Pethamai Agatru அறியாமையை போக்கு Eliminate ignorance

பை பையலோடு இணங்கேல் Payalodu Inangel அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே Do not get along with fools

பொ பொருள்தனைப் போற்றி வாழ் Porulthanai Potri Vazh செல்வத்தை வீண் செலவு செய்யாமல் பாதுகாத்து வாழ் Save wealth without wasting unnecessarily

போ போர்த் தொழில் புரியேல் Porth Thozhil Puriyel யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே Avoid getting into unnecessary trouble scenarios


மகர வருக்கம் – Magara Varukkam
    

மனம் தடுமாறேல் Manam Thadumaarel எதனாலும் மனக்கலக்கம் அடையாதே Do not get mentally disturbed

மா மாற்றானுக்கு இடம் கொடேல் Maatranukku Idam Kodel பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே Don’t let the enemy succeed you

மி மிகைபடச் சொல்லேல் Migai Pada Sollel சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே Do not exaggerate or build up things

மீ மீதூண் விரும்பேல் Meethoon Virumbel மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே Do not eat excessive food

மு முனைமுகத்து நில்லேல் Munaimugathu Nillel எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே Do not start a fight

மூ மூர்க்கரோடு இணங்கேல் Moorkarodu Inangel மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே Do not deal with aggressive / stubborn people

மெ மெல்லி நல்லாள் தோள்சேர் Melli Nallaal Thol Ser பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ் Be truthful to your wife

மே மேன்மக்கள் சொல் கேள் Meyn Makkal Sol Kel நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட Listen to the words of wise and scholarly people

மை மை விழியார் மனை அகல் Mai Vizhiyor Manai Agal விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில் Keep away from people who are jealous

மொ மொழிவது அற மொழி Mozhivathu Ara Mozhi சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல் Utter words with great clarity

மோ மோகத்தை முனி Mogathai Muni நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு Have control on your urges


வகர வருக்கம் – Vagara Varukkam
    

வல்லமை பேசேல் Vallamai Pesel உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே Do not praise your own talents

வா வாது முற்கூறேல் Vaathu Murkoorel பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே Do not gossip and get into arguments

வி வித்தை விரும்பு Vithai Virumbu கல்வியாகிய நற்பொருளை விரும்பு Show interest and learn good skills

வீ வீடு பெற நில் Veedu Pera Nil முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து Progress for a peaceful life

வு உத்தமனாய் இரு Uthanamai Iru உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு Lead your life with exceptionally good qualities

வூ ஊருடன் கூடி வாழ் Oorudan Koodi Vazh ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ் Have a sense of unity among the people you live with

வெ வெட்டெனப் பேசேல் Vettena Pesel யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே Do not utter harsh or rude words

வே வேண்டி வினை செயேல் Vendi Vinai Seyel வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே Do not purposely commit sins / bad deeds

வை வைகறைத் துயில் எழு Vaigarai Thuyil Ezhu நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு Get up from bed early in the morning

வொ ஒன்னாரைத் தேறேல் Onnaarai Thaerael பகைவர்களை நம்பாதே Do not believe in your enemy

வோ ஓரம் சொல்லேல் Oram Sollael எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு Do not give a biased opinion / judgement


Please leave your valuable suggestions and feedback here