Vetri Verkai – வெற்றி வேற்கை Introduction |
1 |
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் | Ezhuththu Ariviththavan Iraivan Aagum | கல்வி கற்பித்த ஆசான் இறைவன் ஆவான் | Supreme is the one who initiates learning | ||
2 |
கல்விக்கு அழகு கசடு அற மொழிதல் | Kalvikku Azhagu Kasadara Mozhithal | குற்றமின்றி பேசுதலே கற்ற கல்விக்கு அழகு | The beauty of learning is to speak without ambiguity | ||
3 |
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் | Selvarkku Azhagu Sezhungilai Thaanguthal | சுற்றத்தோடு கூடிய பெருங்குடும்பத்தை வகிப்பதே செல்வர்க்கு அழகு | The beauty of the wealthy is to support their dear relatives | ||
4 |
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் | Vediyarkku Azhagu Vedamum Ozhukkamum | வேதம் ஓதுவதும், ஒழுக்கத்தோடு இருப்பதுமே ப்ராம்மணர்களுக்கு அழகு | The beauty of a priest is to lead a moral and religious life | ||
5 |
மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை | Mannavarkku Azhagu Sengol Muraimai | நீதி தவறாது முறையோடு அரசு செய்வதே அரசர்க்கு அழகு | The beauty of a king is to rule with justice | ||
6 |
வணிகர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல் | Vanikarkku Azhagu Valarporul Eettal | குன்றாத செல்வத்தை சேர்ப்பதே வணிகர்க்கு அழகு | The beauty of a merchant is to increase his wealth | ||
7 |
உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல் | Uzhavarkku Azhagu Yer Uzuthu Oon Virumpal | விவசாயம் செய்து உண்பதே உழவர்க்கு அழகு | The beauty of the farmer is to live by his produce | ||
8 |
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் | Manthirikku Azhagu Varum Porul Uraithal | வரப்போவதை முன்கூட்டியே ஆராய்ந்து உரைப்பதே மந்திரிக்கு அழகு | The beauty of the minister is to anticipate the future | ||
9 |
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை | Thanthirikku Azhagu Tharugan Aanmai | அஞ்சாமையும், வீரமுமே தளபதிக்கு அழகு | The beauty of the commander is to show bravery |