Andal_VaazhiThirunamam


ஆண்டாள் – வாழி திருநாமம்

Azhwar Paasuram Count Media
ஆண்டாள் வாழி திருநாமம் 2
Total 2

1   ஆண்டாள் – வாழி திருநாமம் – 1 – வேதப் பிரான் பட்டர் திருவாய் மலர்ந்தருளியது

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர் *

ஜோதிமணிமாடம் தோன்றுமூர் * நீதியால்

நல்லபக்தர் வாழுமூர் * நான்மறைகளோதுமூர்

வில்லிபுத்தூர் வேதக் கோனூர் *

 

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் *

வேதமனைத்துக்கும் வித்தாகும் * கோதை தமிழ்

ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை *

வையம் சுமப்பதும் வம்பு

   

2   ஆண்டாள் – வாழி திருநாமம் – 2 – அப்பிள்ளை திருவாய் மலர்ந்தருளியது

திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே *

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே *

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே *

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே *

ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே *

உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே *

மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே *

வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே