பெரியாழ்வார் – தனியன்
Azhwar | Paasuram | Count | Media | |
---|---|---|---|---|
பெரியாழ்வார் | தனியன் | 3 | ||
Total | 3 |
1 பெரியாழ்வார் – தனியன் – 1 – நாதமுனிகள் அருளிச் செய்தது
குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான் *
நரபதி பரிக்லுப்தம் சுல்கம் ஆதாது காம: *
ச்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாக்ஷாத் *
த்விஜ குலதிலகம்தம் விஷ்ணு சித்தம் நமாமி
2 பெரியாழ்வார் – தனியன் – 2 – பாண்டிய பட்டர் அருளிச் செய்தது
மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று * ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் * முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் * கீழ்மை யினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து
3 பெரியாழ்வார் – தனியன் – 3 – பாண்டிய பட்டர் அருளிச் செய்தது
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று *
ஈண்டிய சங்கம் எடுத்தூத * வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான் *
பாதங்கள் யாமுடைய பற்று