பெரியாழ்வார் – வாழி திருநாமம்
Azhwar | Paasuram | Count | Media | |
---|---|---|---|---|
பெரியாழ்வார் | வாழி திருநாமம் | 1 | ||
Total | 1 |
1 பெரியாழ்வார் – வாழி திருநாமம் – அப்பிள்ளை திருவாய் மலர்ந்தருளியது
நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே *
நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே *
சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே *
தொடைசூடிக்கொடுத்தவள்தன் தொழுந்தமப்பன் வாழியே *
செல்வநம்பி தன்னைப்போல் சிறப்புற்றான் வாழியே *
சென்றுகிழியறுத்து மால்தெய்வமென்றான் வாழியே *
வில்லிபுத்தூர்நகரத்தை விளங்கவைத்தான் வாழியே *
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே