திருவரங்கத்தமுதனார் – தனியன்
Azhwar | Paasuram | Count | Media | |
---|---|---|---|---|
திருவரங்கத்தமுதனார் | தனியன் | 4 | ||
Total | 4 |
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன் *
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் * என்னுடைய
சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு *
என்னுக் கடவுடையேன் யான்
நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதின்றி நண்ணினர்பால் *
சயந்தரு கீர்த்தி இராமானுசமுனி தாளிணைமேல் *
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும்அன்பால் *
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே
இனி என் குறை நமக்கு எம்பெருமானார் திருநாமத்தால் *
முனி தந்த நூற்றெட்டு சாவித்திரி என்னும் நுண்பொருளை *
கனி தந்த செஞ்சொற் கலித்துறை அந்தாதி பாடித் தந்தான் *
புனிதன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே
சொல்லின் தொகைகொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும் *
நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல்லாம் என்றன் நாவினுள்ளே *
அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
வெல்லும் பரம * இராமானுசா இதுஎன் விண்ணப்பமே